Apr 2, 2010

”அண்ணாச்சித் தெரு”

’அங்காடித் தெரு’ படத்தைத் திரைப்படம் என்று பார்க்க முடியாமல் போவதற்கு, ”காட்சிகள் கற்பனை அல்ல; அத்தனையும் அண்ணாச்சி கடைகளின் நிஜம்” என்பதை நாம் உணர்வதே காரணம். சில விமர்சனங்களில் சொல்லியிருப்பது போல காட்சிகளில் ஏதும் மிகை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எல்லாம் நாம் ’தெரிந்துகொள்ள விரும்பாத’ நிஜங்கள்.

ண்ணாச்சி கடைகளில் காலை 8 மணி (அல்லது அதற்கும் முன்னால்) முதல் இரவு 11-12 வரை ஓய்வேதும் இல்லாமல் வாரம் 6 நாள் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். ஏழாம் நாள் ஏதாவது ‘படத்’துக்குப் போகிறார்கள். (”மதிய உணவுக்கு 20 நிமிஷம் தான் தருவார்கள்” என்று ரங்கநாதன் தெரு அண்ணாச்சி கடையில் வேலை செய்யும் பெண், முன்னொரு நாள் என் தங்கை போயிருந்தபோது சொல்லியிருந்தாள்). எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத இதற்குக் காரணம் கிராமத்து அறியாமை, மற்றும் கொடுமையான வறுமை. ஒருவர் விடாமல் எல்லா அண்ணாச்சிகளும் சின்ன வயதில் இப்படி மாடாக உழைத்து மேலே வந்திருப்பதால், ‘மாடாகத் தேய்வதே உழைப்பு’ என்ற பொய்யான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

ண்ணாச்சிகள் ஸ்டைல் -சம்பளத்திற்கு மேல் தங்க இடமும் மூன்று வேளை சாப்பாடும் தருவது. இதெல்லாமே சொற்பமாக சல்லிக்காசாக இருந்தாலும் அதை விட்டுச் செல்ல யாரும் விரும்புவதில்லை -பிற வேலைகளில் உள்ள “நிச்சயமின்மை’ பயமுறுத்துவதால். நம்மைப் போல் “labor law regulations" "exploitation of illiteracy" "abuse of poverty" என்றெல்லாம் பேசத் தெரியாத அந்தத் தொழிலாளர்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தது: இந்த வேலையை விட்டால் நடு ரோடு தான் கதி என்பது. அதனாலேயே வேலை பறி போவதை சிறிதும் விரும்புவதில்லை. ’கொத்தடிமை’, ’ஜெயில் கைதி’ என்றெல்லாம் நினைப்பதும் கிடையாது. வறுமை மற்றும் அறியாமை.

Child labor ஜப்பான் மற்றும் மேல்நாடுகளில் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. Sexual harassment, power harassment, limited working hours பற்றியெல்லாம் இப்போது பெரிய கம்பெனிகள் மிகக் கவனமாக இருக்கின்றன. நமக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. அதிகாரிகளும் ‘நம்ம பை கொஞ்சம் நிறைந்தால் சரி’ என்று இருக்கிறார்கள். அதுவரை Demand-Supply தியரியின் படி அண்ணாச்சிகள் காட்டில் அடைமழை தான்.

ண்ணாச்சிகளைக் ‘குறிவைத்து’ அடிக்கும் இந்தப்படத்திற்கு அண்ணாச்சிகள் தரப்பில் கூடிய சீக்கிரம் அரசியல் ரீதியாக எதிர்ப்பு வரலாம். (Aftar all, முதல்வரின் ‘துணைவி’ அண்ணாச்சி ஆளாச்சே!)

(டத்தின் எளிமையான மெயின் காரக்டர்களும் ‘கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ போன்ற வரிகளை ஜெயமோகன் நைஸாக நுழைத்திருப்பதும் என்னைக் கவர்ந்தன. ஸ்னேகா வருவது போன்ற கலகலப்பான காட்சிகளைக் கூட்டியிருக்கலாம்).

Apr 1, 2010

சேர்ந்து வாழ்ந்தார்?


திருமணத்திற்கு முன் ஒரு
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் (cohabiting) மேல்நாட்டு வழக்கம் நம்மால் ஜீரணிக்க முடியாதது. நம் கலாச்சாரத்தை ‘ஆ, ஊ’ என்று புல்லரித்து, மேல்நாட்டவரை ‘சீ’ என்று பார்ப்பவர்களுக்கு இது ஒரு ‘லட்டு’ மாதிரி பாயிண்ட். என்னதான் தனிமனித உரிமை அது, இது என்று மேல்நாட்டவர் சொன்னாலும், பின் திருமணம் என்ற ஒன்றை ஏனய்யா இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றும். ’திருமணத்திற்கு முன் உறவு’ (premarital sex) என்பதும் நம்மூரில் கிட்டத்தட்ட இதே நிலையில் சிலவருடம் முன் வரை இருந்தது; இப்போது அங்கங்கே ‘இலைமறை காயாக’ நடந்து வருகிறது -அதை ஓப்பனாக ஒத்துக்கொள்ளும் அளவுக்கு இன்னும் நாம் தேறவில்லை. திருமணமாகாமல் குழந்தை என்பது நம்மூரில் நினைத்தும் பார்க்க முடியாதது; அமெரிக்காவில் சகஜம். (சென்றமுறை என் மகளுடன் அவள் ஹைஸ்கூலுக்குப் போனபோது சில மாணவிகள் புகை பிடிப்பதைப் பார்த்து ‘திடுக்’கிட்டேன். "Oh dad, some have even babies" என்றாள் மகள்! )


நான் எழுத வந்தது அதைப் பற்றியல்ல. சமீபத்தில் இந்திய சுப்ரீம் கோர்ட் சேர்ந்து வாழ்தலும், திருமணத்திற்கு முன் உறவும் சட்டப்படி எந்த வகையிலும் குற்றமல்ல என்று சொல்லியிருக்கிறது. நமக்குத் தெரிந்தது தான்; அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருபடி மேலே போய் சேர்ந்து வாழ்தலுக்கு ஆதரவாக இந்து மதத்திலிருந்து கிருஷ்ணன் - ராதாவை உதாரணம் காட்டி பேசியிருக்கிறாரே, அது தான் என்னைக் கவர்ந்தது!

னக்குத் தெரிந்தது கிருஷ்ணன் நம்ம மு.க. போல் மனைவி, துணைவி என்று பாமா-ருக்மணியுடன் வாழ்ந்தது மட்டும்தான். ராதாவுடன் சின்ன வயதில் ‘அப்படி, இப்படி’ சில்மிஷம் பண்ணியதாகவும், ராதா அந்த ‘கிக்’கிலேயே ஏங்கியதாகவும் தான் படித்திருக்கிற்னே தவிர, அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது பற்றித் தெரிந்திருக்கவில்லை. சு.கோ.நீ. சொல்லியிருப்பதாலும், பி.ஜே.பி. கண்டனம் கூடத் தெரிவிக்காததாலும் நிஜம் என்றே நம்ப இடமிருக்கிறது. சேர்ந்து வாழ்ந்த கடவுளை வணங்கும் நாட்டில் அந்த வழக்கம் சுத்தமாக இல்லாமல் போய் எல்லாம் ‘முறைப்படி’ என்று ஆயிற்று. முற்றும் துறந்த முனிவராக ஒரு முறையோடு வாழ்ந்த ஜீசஸை வணங்கும் நாடுகளில் முறையில்லாமல் வாழ்வதே முறையாகிவிட்டது. முரண்!

டுத்தமுறை தீபிகாவுடன் கிறுஷ்ணன் கோவிலுக்குப் போகையில் சந்நதிக்கருகில் நின்று “இன்னா நைனா, சின்ன வயசில குளிக்க வர்ற பெண்கள் கிட்ட சேலை திருடறது, சேர்ந்து வாழ்தல்ன்னு படா கில்லாடியா இந்துகீறே..! கலக்கிட்ட மாமூ..” என்று சொல்லவேண்டும். (முன்பொருமுறை எம்பெருமான் திருமுருகக்கடவுள் வள்ளி-தெய்வானையுடன் திருக்காட்சி அருளும் திருச்செந்தூர் கோயிலில் "எனக்குப் பிடித்த கடவுள் முருகன் தான்" என்றேன். அவள் ஏன் என்று கேட்கவில்லை).