Dec 1, 2011

Luray Caverns

வாஷிங்க்டனுக்கு அருகில் ‘லுரே கேவர்ன்’ (Luray Caverns) என்ற –கொஞ்சம் பாப்புலரான– ‘குகை’ ஒன்றைப் பார்க்கவிருப்பதாக சொன்னபோது, நண்பன் ஒருவன் சொன்னது:” அந்தக் கேவலமான இடத்திற்கா, காசைக் கரியாக்கி போறீங்க?” இருந்தும், 90 மைல் பயணித்து அங்கே சென்றோம்– ஃப்லோரிடா மயாமியிலிருந்து இந்தப் பக்கம் ThanksGiving holidaysக்காக வந்திருந்த ஜான்–ரெப்லி தம்பதிகளுடன்.


தற்செயலாக சுமார் 130 வருஷம் முன்பு கண்டுபிடிக்கப்பட்ட குகையைப் பார்க்கும் போது, ஆர்வத்தை விட, எதையும் பணம் பறிக்கும் கருவியாக மாற்றும் அமெரிக்கர்களின் innovative business approach தான் பெரிதாகத் தெரிந்தது. குகையின் ஒரு பகுதியில் லேசாகத் தட்டினால் எதிரொலித்து இசையாக நமக்குக் கேட்பதை, இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு மெஷின் மூலம் ஆடோமாடிக்காக சின்ன ராட் ஒன்றால் குறிப்பிட்ட இடைவெளியில் பாறையின் பல பகுதிகளில் தட்டி, ஏதோ ஒரு மேற்கத்திய இசையை அல்லது பாடலைக் கேட்க வைக்கிறார்கள். “பாறைகளைத் தொட வேண்டாம்; அது, பாறகளைப் பாலிஷாக்கி, நாளடைவில் தேய்த்து விடும்” என்று எழுதியிருக்கிறார்கள். யாரும் தொடவில்லை. (ஆர்வத்தில் லேசாக ஒருமுறை தீபிகா தொட்டுப் பார்த்த போது, ஒரு அமெரிக்கர் “Do you speak English? It is written there that one shouldn’t touch the rocks…” என்று சொல்லி மனம் வருந்திச் சென்றார்).



லஞ்சுக்குப் பின் பக்கத்திலேயே இருந்த Garden Maze என்ற ‘புதர்ச் சிக்கலுக்குள்’ கொஞ்ச நேரம் தொலைந்தது சுறுசுறுப்பாக இருந்த்து. ‘ஒரு நாள் அவுட்டிங்கு’க்கு நல்ல இடம்.

4 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

The golden Sun Shine behind gives vitality to any one who is depressed.

Deepika's Subahar said...

You don't have to get so excited, Brindha; that 'golden shine' is just an artificial light up!

Anonymous said...

Masth!!!!!!!Very well done with artificials too.

Post a Comment