பகலவன் எழுதியது-
<< சென்ற வாரம் "நான் கடவுள்" பார்த்து விட்டு வந்து இரண்டு மூன்று நாட்கள் அந்த பாதிப்பு, << அதிர்வு, நினைப்பு அடங்காமல் இருந்ததால்.....
இங்கும் அப்படியே, பகல்ஸ்.....
"நான் கடவுளி"ன் தனித்தன்மை அதன் முடிவில் இருக்கிறது. பிச்சைக்காரர்களின் அவலம் நாம் பார்க்காதது அல்ல. ஒரு குருட்டுப் பிச்சைக்காரியும் காசியிலிருந்து ஊர் திரும்பிய - அவ்வளவாக சிலாகித்துக் கொள்ள முடியாத- ஒரு இளைஞனும் சந்திக்கும்போது வழக்கமாக நாம் எதிர்பார்க்கும் அனுதாபம், காதல், சண்டை, சுபம் அல்லது தற்கொலை ஏதும் இல்லாமல், கதை பிச்சைக்காரியின் அவலங்களத் தொடர்கிறது. சமுதாயம் அவளை மீட்கவில்லை. மதங்களும் வெறும் போதனையுடன் நின்று விடுகின்றன.
இங்கே தன்னைக் கடவுளாக உணரும் இளைஞன் (இந்து மதத்தின் உச்சக்கட்டமே ஒவ்வொருவனும் தன்க்குள் இருக்கும் கடவுளை அறிந்து கொள்வது தானே) அவளை மீட்பது அவள் மரணம் மட்டும் தான் என்று தெரிந்து, "ஆக்கலும் நானே, அழித்தலும் நானே" என்பதில் கடவுளின் ரோலாகிய அழித்தலைச் செய்கிறான். (அந்த இளைஞன் கொடியவனாகக் காட்டப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்).
சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் சிறப்பாகப் படைத்து நிஜத்துக்கு மிக அருகில் நம்மை இழுத்துச் சென்று பாலா தரும் அந்தக் கொடூரமான முடிவில் ஆன்மீகத்தைக் கலந்திருப்பது அதிர்ச்சி மற்றும் அபாரம். அவள் கிறிஸ்துவ போதனைகளால் கவரப்பட்டு தேவனிடம் ஒதுங்குவது அவள் desparation-ஐக் காட்டுகிறது.
மனித அவலங்களுக்கு ஆன்மீகத்திலும் தீர்வு இல்லை; ஆன்மீகம் சொல்லும் வழி "செத்து மடி என்பதே" என்ற அபாரமான சிந்தனையும், அதைச் சொல்லும் துணிவும் இதுவரை எந்த இயக்குனருக்கும் இருந்ததில்லை. காந்தியும் ஆதரித்த கருணைக் கொலை வரிசையில் வருகிற இந்த "ஆன்மீக வதை", நாம் பார்த்திராதது. அதனாலேயே படம் பார்த்து சில நாட்கள் ஆன பின்னும் நெருடுகிறது..
Feb 17, 2009
Feb 14, 2009
நான் கடவுள் (Non-கடவுள்?)
படத்தில் இரண்டு கிழட்டுப் பிச்சைக்காரர்களின் உரையாடல்’ :
"சரி, விடுய்யா.... எல்லாத்தையும் மேல இருந்து ஒருத்தன் (கடவுள்) பார்த்துக்கிட்டுத் தானே இருக்கான்....."
"தே***ப் பய.... .நம்மள மாதிரி ஈனப் பிறவிங்களுக்கு ஏதுடா சாமி..."
(மேலே தொடரும் முன்....). நீங்கள் தெய்வ நம்பிக்கை மிக்கவராக இருக்கலாம். சுனாமி, பூகம்பம், எய்ட்ஸ், பிறப்பிலேயே ஊனம், பட்டினிச் சாவு இவற்றை வசதியாக அலட்சியப்படுத்தி விட்டு, "இறைவா, என்னே உன் அன்பு!" என்று புல்லரிப்பவராக இருக்கலாம். அல்லது "நமக்கேன் வம்பு?" என்று ஊரோடு ஒட்ட ஒழுகி, குடும்பத்தோடு "Friday கோயிலுக்குக் கூட்டிட்டுப் போ"கிறவராக இருக்கலாம்.
யாராக இருந்தாலும், மேற்சொன்ன உரையாடல் அதன் பச்சையான வார்த்தைப் பிரயோகங்களை மீறி அதில் உள்ள *நியாயத்தை* ஒரு கணமாவது உங்களை யோசிக்க வைக்கிறதா? ("இல்லை" என்றால், 'நான் கடவுள்' உங்களுக்கான படம் இல்லை.).
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
90-ல் உ.பி.யில் வாரனாசிக்கு அருகில் வேலையில் இருந்தபோது, அங்கே வந்திருந்த வசீகரனுக்கும் எனக்கும் அந்த எண்ணம் வந்தது -இறந்து விட்ட எங்கள் அப்பாவிற்கு வாரனாசியில் ’திவசம்’ அல்லது அந்த மாதிரி ’ஏதோ ஒன்று’ செய்ய வேண்டி. அங்கே இங்கே விசாரித்து அதற்கான ஆட்களைப் பிடித்து, "பைசா, பைசா’ மட்டுமே குறியாய் இருந்த அந்த வடநாட்டு ’சாமி’கள்க் கண்டு திகைத்து, ஹிந்தி போதாமல் விலகினோம்.
இன்னொரு நாள் வாரனாசியின் ஜன நெருக்கடியான -மார்க்கெட் போலிருந்த அந்த சின்ன தெருவில் ஏதோ ஒரு "பிராமணாள் காபி, டிபன் ஓட்டலை"த் தேடி கூட்டத்தில் இடிபட்டு நடக்கையில், கூட்டத்தோடு கூட்டமாக நான்கு சைக்கிள் டையர் பொருத்திய ஒரு காய்கறித் தள்ளுவண்டியை ஒருவன் தள்ளிக்கொண்டு போக, அதில் முழுக்க வெள்ளைத் துணியால் மூடி இறுக்கமாகக் கட்டி ......ஒரு பிணம். பார்த்ததும் "திக்"கென்று" மனசுக்குள் ஏதோ பயம் தெறித்து, கூட வந்த வாணிஸ்ரீயை வேறு பக்கம் திருப்பி, பேச்சை மாற்றி, சில வினாடிகளில் "அதை"க் கடந்து கூட்டத்தில் கலந்தேன்.
அதற்கப்புறம் உ.பி. பக்கம் போகவில்லை. இருந்தும், காசியில் மரணத்துக்கு இருந்த ‘மரியாதை’ -அந்தக் காய்கறித் தள்ளுவண்டி -மனதில் தங்கிவிட்டது.
(ஃப்ளாஷ் பாக்கிலிருந்து மீண்டு...). காசியில் கேட்பார் யாருமில்லாத பிணங்களை எரிக்கும் கும்பலில் வேலை செய்பவன் ஒருவனைக் கொஞ்ச நேரம் பின் தொடரலாம், படத்தில். தன்னைக் கடவுள் என்று சொல்லிக்கொண்டு ’கஞ்சா’வில் இருப்பவன் போலிச்சாமியாகவோ, cult ஆகவோ இல்லாமல்.... சாமிக்குக் காட்டும் தீபத்தில் கஞ்சா பற்ற வைக்கிறான். "என்னண்ணே, தீபத்தை அசுத்தப்படுத்தறீங்க?" "நெருப்புக்கு ஏதுடா சுத்தம், அசுத்தம்?". இந்தக் காட்சி, நெருப்பை வணங்கும் இந்து மதத்தைப் பெருமையாகச் சொல்கிறதா, அல்லது தீபத்தில் கஞ்சா பற்ற வைப்பதை நியாயப்படுத்துகிறதா? (அல்லது இரண்டுமா, நான் நினைத்தபடி)
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டில் பஸ்ஸில், ரயிலில் பயணிக்கும் போது தவறாமல் கண்ணில் படுபவர்கள் பிச்சைக்காரர்கள். அதில் உரத்த குரலில் பாடிப் பிச்சை கேட்பவர்கள், பெரும்பாலும் குருடர்கள். இன்னும் கொஞ்சம் யோசித்தால், அந்தக் குருட்டுப் பிச்சைக்காரர்கள் பாடும் பாட்டுக்கள் கீழே வரும் 4-5க்குள் அடங்கிவிடும்:
"அம்மாவும் நீயே... அப்பாவும் நீயே..."
"சொந்தமில்லை பந்தமில்லை வாடுது ஒரு பறவை..."
"இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..."
"தாயில் சிறந்த கோயிலும் இல்லை..."
அப்படியொரு குருட்டுப் பிச்சைகாரியைத் தொடர்ந்து, அவள் வாழ்க்கையை இன்னும் சில மணி நேரம் கவனிக்க உங்களுக்குப் பொறுமை இருக்கிறதா? இந்த டைரக்டர் ஒரு நிஜ பிச்சைக்காரர் கூட்டத்துடன் உங்களை சில மணி நேரம் கவனம் கலையாமல் இருக்க வைக்கிறார். பஸ்ஸிலும் ரயிலிலும் நாம் பார்த்திருந்த அதே பிச்சைக்காரர்கள். கேட்டிருந்த அதே பாட்டுக்கள். அதே அவலங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிச்சைக்காரர்களின் sense of humor-ஐ நம்ம ஊரில் பார்த்திருக்கலாம். ஒருமுறை சென்னை மின்சார ரயிலில்"ஐயா, ஒரு 5 பைசா, 10 பைசாவாச்சும் போடுங்கையா..." என்று இரண்டு ரவுண்ட் வந்த பிச்சைக்காரர் கலெக்ஷனில் பைசா பெறாததால் இறங்கும்போது கொஞ்சம் சத்தமாக "ஒரு 5 பைசா, 10 பைசா இருந்தா போடுங்கையா..." என்று கூவிவிட்டு சரேலென்று இறங்கிப் போனார். (கவனிக்க "ர்" - 'நான் கடவுள்' effect?)
இந்தப் படத்தில் "பிச்சைக்காரப் பயலுக்கு என்ன பேச்சு பாரு?" என்ற கமெண்ட்டிற்கு ஒரு நொண்டிப் பிச்சைக்காரப் பொடியனின் பதில்: "ஆமா, இவரு பெரிய அம்பானி" ("அது சரி, அம்பானி யாரு?" "செல் போன் விக்கிறவர்... உனக்கு அதெல்லாம் தெரியாது")
Toy Story அனிமேஷன் படத்தில் பொம்மைகள் ஒன்றோடொன்று வம்பளந்து கொண்டிருந்ததை நினைவு படுத்துகிறது, பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் ஜோக் அடித்துக்கொள்ளும் காட்சி. Toy Story ஏன் நினைவுக்கு வரவேண்டும் என்று யோசியுங்கள்..... நாம் மனிதர்கள் லிஸ்டில் பிச்சைக்காரர்களை சேர்ப்பதில்லை என்பது தெரியவரும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கதைக்கு வேறெந்த முடிவு வைத்தாலும் அது ‘பத்தோடு பதினொன்றா’கி இருக்கும். டைரக்டருக்கு அந்த விபரீத முடிவின் மேல் அபார நம்பிக்கை, வலுவான சம்பவங்களிலும் கதாபாத்திரங்களிலும் மிகத் திறமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அந்த கொடூரமான முடிவில் ஆன்மீகத்தைக் கலந்திருப்பது...... ஒரு கணம் "இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு இதுதானோ" என்று தோன்றி ’திக்’கென்கிறது. வேறு வழி எந்த மதத்திலும் இல்லையென்பதை படத்தின் சம்பவங்கள் மிகத் துல்லியமாகக் காட்டுகின்றன. ஆழமாக யோசிக்க வைக்கும் தீர்க்கமான முடிவு, திரைக்கதையை வேறு லெவலுக்குக் கொண்டு செல்கிறது. ...... .
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் கடவுள் சொல்வது -இந்தியப் பிச்சைக்காரர்களின் கதையை. அவர்கள் அடி படுவதை. கை,கால் ஒடிக்கப்படுவதை. பொட்டலம் போல் விற்கப்படுவதை. சாவதை. "சாவது தான் சரி" என்று நாம் உணர்வதை.
("India shines" optimist-களும், "அன்பே சிவம்" ‘தேவனின் கருணை" என்று புளகாங்கிதத்தில் இருப்பவர்களும் படத்தைத் தவிர்க்கவும்.)

Feb 11, 2009
"அம்மா அழாதே"
இலங்கைப் பிரச்சனை ‘நிறைவுரை’யை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், சுஜாதா ‘நல்ல கவிதை’ என்று அடையாளம் காட்டியிருந்த "அம்மா அழாதே" என்ற ஈழத்துக் கவிதையின் சில வரிகள்:
"துயிலா இரவுகளில் அப்பா என்று
அலறித் துடிக்கிற சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய் ?
உலவித்திரிந்த நிலவைக் காட்டி
மார்பில் தாங்கி
அப்பா கடவுளிடம் போனார் என்று சொல்லாதே.
துயரம் தொடர்ந்த வகையைச் சொல்.
குருதி படிந்த கதையைச் சொல்.
கொடுமைகள் அழியப் போரிடச் சொல்...."
படித்தவுடன் ‘எடு, கையில் துப்பாக்கியை’ என்று ’புலி’த்தனமான கோபம் வரும் இந்தவகையிலான கவிதை ஈழத்திலிருந்து தான் வரமுடியும். இதை எழுதுவதற்கு தமிழ்நாட்டில் சூழ்நிலை இல்லை என்கிறார், சுஜாதா.

Feb 9, 2009
இரண்டு செய்திகள்
இந்த வாரம் என்னை ஈர்த்த இரண்டு செய்திகளும் தனி மனித உரிமை பற்றியன:
முதலில் ஜப்பானில். ஸாக்கர், பேஸ்பால் என்று எத்தனை விளையாட்டுக்கள் வந்தாலும் இன்னும் சுமோ கொஞ்சம் கூட பாப்புலாரிட்டி குறையாமல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஜனவரியில் நடந்த Emperor Cup போட்டியில் வெற்றி பெற்ற Asashoryu என்ற வீரரை சுமோ விளையாடு கமிட்டி விளாசித் தள்ளிவிட்டது -ஏன்? கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற Asashoryu ஆனந்தக் களிப்பில் இரண்டு கையையும் உயர்த்தி ஆனந்தத்தைக் கொஞ்சம் வெளிக்காட்டி விட்டார். அவ்வளவே. கமிட்டி அவரைக் 'கட்டம்' கட்டித் திட்டி"(He should learn that winning is not everything in Sumo"), பெரிய மனதுடன் "இன்னொரு முறை இப்படி நடந்தால்..." என்று எச்சரித்து விட்டுவிடடது. (சுமோவில் ஜெயித்த பின்னும் எதையோ தொலைத்த மாதிரி முக பாவத்துடன் வீரர்கள் பேசுவதும், போஸ் கொடுப்பதும் தான் இங்கே "மரபு"!) Asashoryu மங்கோலிய நாட்டுக்காரர் ஆகையால் மரபுகளை சில கணங்கள் மறந்துவிட்டார் போலும்! (பின்னர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்).
இரண்டாவது, இந்தியாவில் கர்நாடகாவில் ஒரு இந்துத்வா குரூப், Feb-14ல் Valentine Day கொண்டாடுவதைப் பிரச்சனை ஆக்குகிறது. இளம் பெண்ணையும் ஆணையும் சேர்ந்து அன்று பார்த்தால், அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கோயிலுக்குச் சென்று தாலி கட்ட்ச் செய்வார்களாம்; மறுத்தால் ‘ராக்கி’ கட்டச் சொல்வார்களாம். (அதையும் மறுத்தால் என்ன செய்வார்கள் என்று சொல்லவில்லை). The Hindu நியூஸ்பேப்பரில் இவர்களை Hindu Taliban என்று எழுதியது நூற்றுக்கு நூறு சரியே.
Feb 3, 2009
Arima Hot Spring
If you haven't experienced Japanese hot springs ("onsen"), you haven't been to Japan!
What IS a hot spring? Being a volcanic nation, Japan's deep-underwater resources are hot, which spring out to the surface at several locations -almost in all the cities & towns. Water from the hot springs contain natural minerals which are said to cure several illness. I do not know if there is scientific evidence to substantiate the health benefits of taking bath in hot springs; but physicians in Japan do recommend hot spring baths for skin & muscle related diseases.
Every hot spring lists the minerals its water contains, and gives the names of diseases it could cure. (I read that the famous US President FDR used to frequent a hot spring in Georgia for its therapeutic effects).
What I can say for sure is, that hot springs provide a soothing effect on your Body & Mind; soaking in a hot spring pampers your body and relaxes your mind. The Japanese have been addictive to hot springs!
A typical 'onsen' has a cloth room where one undresses completely, and enters the shower area. There are separate areas for men & women. One must clean one's head & body with the shampoo & body soap provided, before entering into the hot spring area -where you'll see 4m x 4m or larger sized tubs (indoor) or ponds (outdoor) of 'flowing' hot spring water. Outdoors ponds are built of rocks to give a serene atmosphere. People carry a small white towel which is the only thing allowed when inside the hot spring area -but which they keep on the head or outside the pond when they soak their bodies. Nothing other than your bare body is allowed inside the hot water.
The hot water is at a temp of about 42C, and it keeps flowing (it is not stagnant). The water is kept immaculately clean. Most of them close their eyes and one would think if they meditate. With the temp 42C, you can't sit inside the pond for more than 3-4 minutes. People come out and get in -thus giving the body a kind of 'thermal massage'. (Recall that in India people soak a towel in hot water and apply it on where the muscle aches). Most hot spring places come with sauna, jacuzzi or steam room. They charge typically 400-600 Yen, for unlimited usage.
ARIMA is one of the oldest hot springs in Japan, which is located in a mountain top (Mt.Rokko) about 30 km from our place. Great that we live near Arima, which attracts tourists from all over the country. The water is rich in iron, and is uniquely in 'muddy orange' color. All the Arima hotels have their own hot springs available only to the guests. There are 4-5 public baths that are open to all.
A drive to Arima's 'Kin-no-yu' hot spring, and a walk on Arima streets would make a wonderful holiday, especially in winter! (Pics taken in an Arima).
In the streets of Arima...
Tasting Arima hot spring water....

If
Feb 1, 2009
மாணிக் : சென்னை-25
முதன்முதல் நான் ஹாஸ்டலில் என் அறைக்குள் (3-வது பிளாக், ரூம் -20, கிண்டி, 1979) நுழைந்தபோது என் ரூம்மேட் மாணிக்கராஜ். டான் பாஸ்கோ இங்கிலிஷ். (நான் தூத்துக்குடி தமிழ்). கொஞ்சம் மிரண்டேன். அப்புறம் கிரவுண்ட் ஃப்ளோரில் கொசு கடிக்கும் என்று பலரைப்போல ’சமயோசித’மாக சிந்தித்து மேல்மாடி ரூம் 24-க்கு மாறினேன். மாணிக் BE முடித்து IIM-B போய் entrepreneur லைனில் நுழைந்து NIIT franchise ஆரம்பித்து, விழுந்து, எழுந்து வேகமாக அமெரிக்கா பறந்து இப்போ அங்கே ‘தனி ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கும் வரை அவ்வளவாகத் தொடர்பில்லாமல் தான் இருந்தேன். (இடையில் 90-ல் சென்னையில் அவன் கல்யாணத்திற்குப் போனது தவிர).2004-ல் பொன்ராஜும் நானும் குடும்பசகிதம் மாணிக்கின் நியூயார்க் நகர வீட்டில் 2 நாள் தங்கியது ஒரு வசந்த அனுபவம். மாணிக் கடினமான விஷயங்களை எளிதாகவும் கோர்வையாகவும் பேசுவதில் expert. ரெஸ்ட்ராண்டில் strawberry-யும் chocolate fondue யும் (மாணிக் ரெகமென்டேஷன்) எடுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் ’பழசை’ அலசிய பின் பேச்சு பிள்ளை வளர்ப்பு பற்றித் திரும்பியது. "We can only do very little to our children" என்று அவன் சொன்னது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அந்த "little" என்ன என்றபோது வியப்பாக இருந்தது. "பசங்க கிட்ட கொஞ்சம் வெளியே நின்னு guide மட்டும் பண்ணு; ’அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க’ ன்னு முதல்ல நீ நம்பு. அப்புறம் அந்த நம்பிக்கையை அவங்க கிட்ட கொண்டு வா. பசங்க கிட்ட இந்த self-confidence-ஐ கொண்டு வர்றதுதான் உன்னோட பெரிய முயற்சியா இருக்கனும். அப்புறம் பசங்க கிட்ட communication channel எப்பவும் திறந்தே இருக்கணும். அதுக்கு, அவங்க லெவெல்ல communicate பண்ண நாம் கத்துக்கணும்..."
பசங்க லெவல் என்றால் என்ன? உதாரணமாக, அவங்க கேட்கிற அமெரிக்க பாப் பாடல்களக் கேட்டு ("எனக்கும் அமெரிக்க உச்சரிப்பில் பாடல் வரிகள் புரியாது; நெட்டில் தேடிப் பிடித்து லிரிக்ஸை தெரிந்து கொள்வேன்"), அதில் நல்ல, பொல்லாத வரிகளை கண்டுகொண்டு பேச்சுவாக்கில் பசங்களுடன் பேசுவது. மாணிககால் முடிந்தது. நான் அம்பேல்!
மாணிக்கின் இரண்டு பையன்களின் பெயர்களும் அவன் தனித்துவத்தைக் காட்டும்: கவின், மிகல். தூய தமிழிலான இந்தப் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது Kavin, Michael என்றாகி அமெரிக்கப் பெயர்களாகின்றன. வைரமுத்து "கன்னத்தில் முத்தமிட்டாலு’க்காக எழுதிய "ஒரு தெய்வம் தந்த பூவே... கண்ணில் தேடல் என்ன தாயே" பாடலை வரிக்கு வரி ஆங்கிலப்படுத்தி தன் அமெரிக்க நண்பர்களுக்கு விளக்கியிருக்கிறான்.
Hiking -ல் மாணிக்கிற்கு ஒரு ‘காதல்’ -என் போலவே. பார்க்கலாம், நாங்கள் கனவு காண்பது போல் Mt.Fuji hiking போகிறோமா என்று.
மாணிக் எங்க college batch-mate -ன் group e-mail-ல் அவ்வப்போது எழுதும் விரிவான கட்டுரைகளை நான் பிள்ளைகளுக்கு படிக்கக் காட்டுவேன். (எங்க group-ல் பலரும் அதுபோல் செய்வது அப்புறம் தான் தெரிந்தது). இன்றைய பொருளாதாரப் பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு பெரிதாக இருந்தாலும், அதற்கு தீர்வும் அமெரிக்காவிலிருந்துதான் வரும் என்பதில் நான் மாணிக்குடன் உடன்படுகிறேன்.
சமீபத்தில் Obama inaguration பற்றி மாணிக் எழுதிய கட்டுரை The Hindu -வில் வெளியானது. "An occasion I won't miss for the world" என்ற தலைப்பில் எழுதி "What a country!" என்று முடியும் அந்தக் கட்டுரை அமெரிக்காவைக் குற்றம் சொல்வதே ஒரு ‘மேதாவித்தனம்’ என்று நினைக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு ரசிக்குமா என்பது சந்தேகமே. அமெரிக்கா பற்றிய pre-conceived opinion இல்லாதிருந்தால் 29-Jan-2009 The Hindu online edition-ல் அந்தக் கட்டுரையைப் படிக்கலாம்: http://www.hindu.com/2009/01/29/stories/2009012952630900.htm
Jan 30, 2009
AR.Rahman
A friend of mine working with me recalled the story of a couple of youths in Purasaiwalkam (in Chennai) where he was living in. This guy 'R' used to come often to meet his friend 'S' whose dad was running a ready-made clothes shop. These two together would keep talking about drums & keyboard, and nothing about studies or business! As with any Indian parent, this had infuriated S's dad, as he saw R disrupting and distracting his son S's attention on business. He ordered that R should never be seen in his shop. He severely warned S that if only he saw him together with R somewhere in the vicinity, he will have tough time. Their 'clandestine' meetings, however, were continuing.
But then, history has its humble beginnings! In few years 'R' emerged as AR.Rahman, and 'S' as Sahul Hameed (who had sung in ARR's earlier films but later died in a traffic accident). From the noisy streets of Purasaiwalkam where he was warned against seeing his friend, AR Rahman has taken giant leaps into becoming the first Indian ever nominated individually for an Oscar! (Satyajit Ray was awarded Oscar for his lifetime services, but not through nomination & winning. And "Gandhi"s Costume Designer from India did win an Oscar but she had had to pair with a British national).
When AR.Rahman fetched the Golden Globes Award for his score in "Slumdog Millionaire" weeks ago, only few were delighted, as Golden Globes was quite unheard of (at least back in India). Soon came the news of Oscar nomination of the same movie, in which AR.Rahman has got 3 nominations. What a mega achievement of a musician from India!
Let's wait for Feb-22, when the Oscar winners are announced. (I find his "chinnamma.... sollu,sollu,sollu" in a recent Tamil film more appealing than his 'Jai ho' in "Slumdog Millionaire", though :-)

Subscribe to:
Posts (Atom)