Apr 15, 2009

ஸகுரா

எங்கெங்கும் ஹனாமி!
இரவில் ஸகுரா (நான் தீபிகாவைச் சொல்லவில்லை! :-)







சென்ற வாரம் வருடந்தோறும் நடப்பது போல் நாடுமுழுவதும் ஜப்பான் ஸகுரா மலரைக் கொண்டாடியது. வருஷத்தில் ஒரேயொறு வாரம் மட்டும் மரத்தின் இலைகள் ஏதுமின்றி மரம் முழுவதும் வெள்ளைப் பூக்களாகக் காட்சி அளிக்கும் ஸகுரா, சரியாகக் குளிர் முடிந்து ஸ்ப்ரிங் (இளவேனிற்காலம்?) தொடங்கும்போது மலர்கின்றது. ஒரே வாரம் தான்; பூக்கள் எல்லாம் இழந்து, மறுபடியும் வைரமுத்து எழுதிய “பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி போல” அடுத்த வருஷம் வரை மீண்டும் காத்திருக்கிறது. "வாழ்வது கொஞ்சகாலம் என்றாலும் சிறப்பாக, பூத்துக் குலுங்குவது போல வாழவேண்டும்" என்று வாழ்க்கையின் தத்துவத்தையே ஸகுரா தெரியப்படுத்துவதாக ஜப்பானியர்கள் இந்த மலர் வாரத்தை ரசிக்கின்றனர். ஸகுரா ஜப்பானின் தேசிய மலர்.

Hana-mi (பூ பார்த்தல்) என்றழைக்கப்படும் இந்த நிகழ்வின் போது ஸகுரா மரங்கள் இருக்கும் பார்க் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி, பிளாஸ்டிக் பாய் விரித்து அமர்ந்து.... வேறென்ன, சாப்பிடுகிறார்கள். காரோகே செட் கொண்டு வந்து பாடுவோரும் உண்டு. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தும், பெரும்பாலோர் சாப்பாட்டுடன் ’ஸாகே’ எனப்படும் உள்ளூர் தேவபானம் பருகியும், எந்த வித அசம்பாவிதமும் நிகழாமல் இருப்பது ஜப்பானுக்கே உரிய மற்றுமொரு வியப்பான விஷயம். இரவில் ஸ்பெஷலாகப் போடப்பட்ட விளக்குகளின் வெளிச்சத்தில் ஸகுரா மரத்தடியில் இட்லி சாப்பிடுவது இன்னொரு ‘கிக்’- நாங்கள் மிஸ் பண்ணுவதில்லை.

முதல் முதல் இந்த முறை ஸகுரா தனிமையில் கழிந்தது. Himeji castle-ஐச் சுற்றிலும் இருக்கும் ஹனாமிக்கு மிகப் பாப்புலரான பூங்காவை வலம் வந்தபோது உலகமே ஜோடி-ஜோடியாக, அல்லது குடும்ப சகிதமாக இருந்தது (போல் தெரிந்தது). ’தனியாக யாரும் இருக்கிறார்களா?’ என்று தேடிப்பார்த்தேன்; இரண்டொரு ஸீனியர் சிட்டிஸன்’கள் கையில் AK-47 அளவில் காமெரா, காமெரா ஸ்டாண்ட், இத்யாதி ...தூக்கிக்கொண்டு தரைக்கு 4 மீட்டர் உயரத்தில் எதையோ உற்றுப்பார்த்து நடந்துகொண்டிருந்தனர். Professionals! இத்தனை கூட்டத்திற்கு நடுவிலும் தனியாக ஒரு இளம்பெண். ஆச்சரியத்தில் கிட்டப் போய்ப் பார்த்தால்...

ஹனாமி கூட்டத்தில்
தனிமையில் அவள்.
இல்லை,
நாய்க்குட்டியுடன்.


என்று ’சட்’டென்று ஒரு ஹைக்கு எழுதி, அவளை ஒரு ‘கிளிக்’கிட்டு, கூட்டத்தினுள் கலந்தேன். (ஹைக்கு இலக்கணம் தெரிந்தவர்கள் மன்னிக்கவும்).


Apr 11, 2009

அந்தக் கண்கள்....


அண்மையில் பழைய புத்தகங்களைத் தேடியபோது அவ்வப்போது கண்ணில் படும் 1985-ல் நான் எழுதிய டயரி மீண்டும் ’பட்டது’. அதில் எனக்குப் பிடித்த கவிதையாக அப்துல் ரகுமானின் “அந்தக் கண்கள்...” என்ற கவிதையைக் கத்தரித்து ஒட்டியிருக்கிறேன்.

அந்தக் கண்கள்....
என்னிடம் எதைத் தேடுகின்றன?
இந்தச்
சாம்பல் மேட்டில்
கனலும் இல்லை
பொறியும் இல்லை.
இப்போது
அந்தக் காதலும் இல்லை;
காதலின்
நினவுகளும் இல்லை.
இதயத்தில் பற்றிய நெருப்பில்
எதுவுமே மிஞ்சவில்லை.
நீ
யாருடை சித்திரத்தைக்
கண்களில் வைத்துக்கொண்டிருக்கிறாயோ
அந்தக் காதலன்
நான் அல்ல.
நான்
அவனுடைய மௌனச்சிதை!

இந்த உலகத்தில்
அன்பு குற்றம்.
நம்பிக்கை குற்றம்.
ஏங்குவதோ பாவம்.
இங்கே
காதலுக்கு இடமில்லை.

அப்துல் ரகுமானின் புதுக்கவிதை வரிகளில் பெர்ஸனலாக ஏதோ ஒரு மெஸேஜ் இருப்பதை உணரலாம். பல்வேறு காலகட்டங்களில் இந்த வரிகள் என்னுடன் ’நெருக்கமாவதை’ உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் தனிமை நேரங்களில்.

இருந்தும், 85-ல், கனவுகள் மட்டுமே இருந்த அந்த நாட்களில், இந்தக் கவிதை என்னை ஏன் கவர்ந்தது என்று புரியவில்லை.

.

குனியக் குனியக் குட்டு!


ஜப்பானில் மரியாதை நிமித்தம் குனிவது மரபு. ஒரு சின்ன நன்றியும் மன்னிப்பும் கூட குனிதல் இல்லாமல் வருவதில்லை. ஒருவர் குனியும்போது, அதற்கு மரியாதையாக குனிதலைப் பெறுபவரும் குனிகிறார். பெரிய மனிதர்களைப் பார்க்கும்போது, 90 டிகிரி வரை குனிவதும், ‘பெரியவர்’ நிமிர்ந்த பின்னும் ஜூனியர், ஒரு சில நிமிடங்களாவது அதிகம் குனிந்திருக்க வேண்டும் என்பதும் இன்று வரை வழக்கத்தில் உள்ள மரபு. ”நான் உன்னிலும் எந்த வகையிலும் உயர்ந்தவன் இல்லை” என்று ஒருவருக்கொருவர் உணர்த்தி நட்பு பாராட்டுவதாக ஆரம்பித்த வழக்கம்.

மேற்கத்திய நாடுகளில் குனிதல் வேலையை, கை கொடுத்தல் செய்கிறது. “என் கைகளில் எந்த ஒரு ஆயுதமும் இல்லை; நாம் நண்பர்கள்” என்பதைக் குறிக்கும்படி தொடங்கியது. (நம் ஊரின் இரு கை கூப்பி வணங்குதலின் சரித்திரக் காரணங்கள் தெரியவில்லை).

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சவூதி மன்னரை சந்தித்த போது மரியாதை காரணமாகக் குனிந்து வைக்க, அது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. http://www.youtube.com/watch?v=4gJtIss7xso குனிவது sub-servient; அமெரிக்க ஜனாதிபதி யாருக்கும் குறைந்தவர் இல்லை; Protocol violation, இத்யாதி, இத்யாதி. வெள்ளை மாளிகை “ஒபாமா குனியவில்லையே; சவூதி மன்னரின் கையைக் குலுக்குகிறார், அவ்வளவே” என்று மறுத்து, இன்னும் கொஞ்சம் தமாஷ் காட்டியது! ”என்ன இருந்தாலும் ஒபாமா முஸ்லிம் தானே... அதான்” என்கிறது Washington Times: "The bow was an extraordinary protocol violation. Such an act is a traditional obeisance befitting a king's subjects, not his peer. There is no precedent for U.S. presidents bowing to Saudi or any other royals....Mr. Obama's bow to the Custodian of the Two Holy Mosques does not help his image with those who believe he is secretly a Muslim, and why he chose to bow only to the Saudi King and not to any other royals remains unexplained..... Mr. Obama is proving that one can be elected president without knowing how to behave presidentially”.

இந்தக் கூத்தில், எனக்குப் புரியாதது -குனிவது அராபியர்களின் வழக்கமா, என்ன? ஒபாமா ஏன் சவூதி மன்னரிடம் குனிய வேண்டும்? பதிலுக்கு ச. மன்னர் கொஞ்சமும் குனிய முயற்சி செய்ததாகத் தெரியவில்லை!

Apr 4, 2009

Aminjikarai beggars & Tokyo homeless.


ரொம்ப வருஷத்திற்கு முன் அமிஞ்சிக்கரை முருகன் ஸ்டோர்ஸில் சித்தப்பாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு பிச்சைக்காரர் வந்தார். சில நிமிடத்தில் அடுத்தவர். பின் இன்னொருவர். மற்றொருவர்... பிச்சைக்காரர் traffic அன்று வழக்கத்திற்கு அதிகமாக இருந்தது. என்ன என்று கேட்டால் வாரத்தில் ஒருநாள் என்று முறை வைத்துக்கொண்டு எல்லா பிச்சைக்காரர்களும் ஒவொரு ஏரியா போவார்களாம். அன்று திங்கட்கிழமை (அல்லது செவ்வாய்க்கிழமை); அன்று அமிஞ்சிக்கரை முறையாம். வாரத்தின் மற்ற 6 நாட்களும் அமிஞ்சிக்கரை கடைகள் பக்கம் ஒரு பிச்சைக்காரரும் வருவதில்லையாம். என்ன ஒரு disciplined/ organised workforce, தங்களுக்குத் தாங்களே வரைமுறை வைத்துக்கொண்டு சூபர்வைசரோ போலீஸோ இல்லாமல் தாங்களே அதை முறையாக பின்பற்றிக்கொண்டு!

டோக்கியோவின் homelss பற்றி சமீபத்தில் இங்கே செய்தித் தாளில் படித்ததும் அதே எண்ணம் தான் தோன்றியது. பிளாட்பாரத்தில் அட்டைப் பெட்டிகளுடன் கடைவாசலில் தூங்கும் இவர்கள் கடைப்பிடிக்கும் maaners: (Click at the newspaper clipping above)

(1) சாப்பாட்டு மீதிகளைக் குப்பைத்தொட்டியில் தவிர வேறு எங்கும் எறிவது கிடையாது. Cleanliness!

(2) New comers க்கு ஸீனியர்கள் பிளாட்பாரத்தை எப்படி சுத்தமாக வைப்பது, எப்படி கடை வாசலை காலையில் கடைக்காரர் வரும் முன் க்ளீன் செய்வது என்று கிளாஸ் எடுக்கிறார்கள். Indoctrination & Training!

(3) இலவசமாக வாலண்டீர்கள் சப்ளை செய்யும் உணவுப்பொட்டலங்களை வரிசையில் நின்று வாங்குகிறார்கள். Orderliness!

(4) Extra pack கிடைத்தால் அதைத் தானே வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுடன் - உணவுப் பொட்டாலம் கிடைக்காதவர்களுடன் பகிர்ந்து கொள்வது. Sharing & Distribution!

(5) வரிசையில் நிற்கும்போது குடித்திராமல் இருப்பது. Disciplined when on duty!

"இப்போ வர்ற புது homelss ஆளுங்கள்லாம் முன்னே மாதிரி இல்லை. அன்னைக்கு ஒரு புதுமுகம் வழக்கமா இன்னொருத்தர் படுக்கும் இடத்தில் படுக்கிறார்; கேட்டால் இது public place தானே என்கிறார். வர வர ஒரு ஒழுங்குமுறையே இல்லாமல் போய்விட்டது..." என்று அங்கலாய்க்கிறார், ஒரு நீண்ட நாளைய homeless.

ப்பானின் தனித்தன்மைகளில் ஒன்று எதையும் முறைப்படி செய்வது. எதற்கும் ஒரு முறை இருப்பது, அதை எல்லோரும் தவறாமல் பின்பற்றுவது. அதற்கு நிகராக இந்தியாவில் அமிஞ்சிக்கரை பிச்சைக்காரர்களை மட்டுமே நான் சொல்வேன்.

பகலவன் - சென்னை 25




AR.ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்ததும் நான் முதலில் நினைத்தது பகலவனைத்தான். அதுபற்றி அப்புறம்.

மிகச் சில தம்பதியருக்கே பொருத்தம் பெயரிலேயே தொடங்குகிறது. பகலவனின் மனைவி -வெண்ணிலா.


பகலவனும் முழுத்தமிழில் பெயர் அமைந்ததாலோ என்னவோ கவிதை, எழுத்து என்று முன்னமே ஆர்வமாக இருந்தான். வைரமுத்துவை ’டயமண்டு’ என்று செல்லமாகத் திட்டினாலும், திரைக்கு வெளியே வைரமுத்து எழுதிய ”அது ஒரு காலம் கண்ணே, கார்காலம்” போன்ற கவிதைகளைப் படிப்பவன். திரையில் வைரமுத்துவின் வரிகளை சட்டென்று கண்டுபிடித்துவிடுவான். (சிவாஜியின் ”பூம்பாவாய்.. ஆம்பல், ஆம்பல்... உன் புன்னகையோ மவ்வல், மவ்வல்”பாடலில் ஆம்பலுக்கும் மவ்வலுக்கும் அவனிடம் தான் அர்த்தம் கேட்கவேண்டும்). ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ”கணியன் பூங்குன்றனார்” என்றெல்லாம் எங்கள் குரூப் ஈ-மெயில்களில் quote பண்ணியிருந்தான். (”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற காலம் கடந்த சொற்றொடரை எழுதியவர்). இன்னும் அவன் மு.க. அபிமானியாக இருப்பதற்கு அரசியல் அன்றி மு.க.வின் சிலேடைப் பேச்சை ரசிப்பதுதான் உண்மையான காரணம்.

சந்தேகமின்றி, சுஜாதாவின் தீவிர ரசிகன். மரியாதையாக சுஜாதா “எழுதியிருக்கிறார்...” என்பான், ‘ன்’னைத் தவிர்த்து.

கல்லுரி காலங்களில் பாலச்சந்தரின் கதைசொல்லும் நேர்த்தியை வியந்த இளைஞர் அணியில் அவனும் ஒருவன். கிண்டி ஹாஸ்டலில் அவன் ரூமில் பாலச்சந்தர் பற்றி ஒரு புதுக்கவிதையே எழுதி வைத்திருந்தான்:

”சினிமா
சிக்கலில் இருந்தபோது
சிக்கலையே சினிமாவாக்கியவன்”

(அதற்குக் கீழே நான் இன்னொரு வரியாக “....அதில் சில்லறை சேர்த்தவன்” என்று எழுதிவைத்ததாக, 2003-ல் நான் -பகலவன் -பொன்ராஜ் குடும்பமாக ஃப்ளோரிடாவில் ஒருவாரம் ஒரு மெகா வேனில் சுற்றியபோது சொன்னான்)

தமிழார்வம், பாலச்சந்தர் ஈர்ப்பு, புதுக்கவிதை நாட்டம் இவற்றுடன் கல்லூரி காலங்களில் இள ரத்தமும் சேர்ந்து தனக்கென சீர்திருத்தக் கருத்துக்கள் கொஞ்சம் வைத்திருந்தான். விதவைத் திருமணத்தை சமூகம் அங்கீகரிக்காததைப் பற்றி சூடாகப் பேசி, “மணந்தால் ஒரு விதவையையே மணப்பேன்” என்று அவன் சொன்ன தீவிரத்தைப் பார்த்து வசீகரன் சொன்னது: “இவன் இருக்கிற வேகத்தைப் பார்த்தால், யாரையாவது விதவையாக்கிட்டு தான் அந்தப் பெண்ணைக் கல்யாணம் பண்ணுவான் போல...”

தமிழர்கள் பலரும் போல் இசையின் உச்சம் இளையராஜாதான் என்று நம்புகிறவன் (இன்றுவரை). இ.ராஜாவை மேஸ்ட்ரோ என்று மட்டுமே குறிப்பிடுவான் -பெயரைத் தவிர்த்து. AR.ரஹ்மானின் ஆரம்ப காலங்களிலும் அதற்கப்புறம் ஒவ்வொன்றாக மெகா ஹிட்கள் வந்தபோதும் “AR.ரஹ்மான் ஒரு jingles guy" என்பான். “இசைஞானியுடன் ஒப்பிடுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை...”.

ண்மையில் AR.ரஹ்மான் ஆஸ்கர் பெற்றபோது, இளையராஜா ரசிகர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாததைப் பார்த்தேன். "ARR happens to be at the right place at the right time, with the right group..." என்கிற ரீதியில் தான் நிறையப்பேர் சொல்கிறார்கள். இதுபற்றி நான் எழுதியதும், பகலவனின் பதிலும் கீழே:

நான்:
Its a month since AR Rahman received his two Oscars. I happened to talk to a friend of mine who is an ardent Ilayaraaja fan. When asked about Rahman's Oscar, He did not think it special. What this Oscar had brought out was, according to him, that any average-level professional who is at the right place at the right time could fetch Oscar.

He recalls that AAR has done much better songs earlier in Indian films, and certainly Slumdog Millionaire is not THE BEST for Rahman. According to him, "Naan KadavuL" would not have had the impact but for Ilayaraaja's soundtrack and also the songs -especially the very first song. So, what Kamal has said ("Oscars follow 'scales' set by the Americans") is not entirely a statement made out of jealous.

Raja had done a lot more even in 'Sinthu Bairavi' days. He didn't win Oscar because none of his movies was at a level enough to reach Oscar nomination. I got curious to know what Pagals thinks of ARR's Oscar -at a time when his Maestro has done an excellent work in Naan KadavuL.

One thing is clear though. Once AR Rahman won the Oscars, for our people, Oscar ceased to be a Great Award! I.For Raja fans its "not a big deal" ("அப்படி ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை போல"!); they don't believe ARR has gone a step ahead of their Maestro!
-----------
பகலவன்:
Remember our old discussion during 1997/98 time frame in this forum (on MBAsand management gurus, I think)? ARR is "smart" whereas Ilaiyaraja is "brilliant". This IMO is indeed the difference. Being brilliant does not take you anywhere. Onehas to be smart to find the correct approach and mechanics involved to reach thetop. ARR mentioned in the cine-musician's meeting, (they showed on Sun-TV acouple of weeks back), that he wondered why not an Indian get an Oscar. Apparently,ARR employed / consulted a Hollywood consultant and took the guidance and here is ARR with Oscar..!!

Will Raja ever get any award (I mean Padmabhushan and such)? Probably not, becausea) he is not a self-promoting guy (its very well known that he does NOT have any PR skills)b) he is in a divine world where all these awards and such does not matter much to him(for him, music is life, or so it has become). Like ARR mentioned, Raja is beyond all these awards. Harris Jayaraj added even further.

That said, I remember mentioning ARR being a "jingles guy" those days and I standby that.

Ever since, he has grown to be smart enough to make jingles into good songs indeed. His approach is different in the sense, he comes up with a short verse and develops layers of music around it to make it grandeur. He also lets the singer come up with subtle variations and accept them into his compositions. On the other hand, Raja is more theory based approach, defining the raaga, scale, harmony everything to fit to the situation described to him. His music *is* written on the paper and singers are *not* allowed to change even a bit. (Look at videos in Youtube, where Raja is adamant about the singers singing the original notes)

In a way, these styles make both ARR and Raja a unique composers, IMO.
Am I happy that ARR got an Oscar? Yes, I do, as a Tamizhan. Do I think his work is outstanding in SDM ? No, I do not think so. Its like a "kichhadi" (for the lack of betterterm, sorry). Would SDM ever get nominated if the same was made by any Indian director?(You know the answer), a big "NO"

Regarding Raja's work in Naan Kadavul, its simply outstanding. Its a great subject matter for many Indian musicians to analyze and educate themselves on how a RR should be done.--Pagalavan
--------------
AR.ரஹ்மானின் ஆஸ்கருக்குப் பின்னால் ஒரு கன்ஸல்டண்ட் இருந்ததாக வரும் செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. இத்தனக்குப் பிறகும், இளையராஜா ரசிகர்கள் இ.ராஜாவை AR.ரஹ்மானுடன் ஒப்பிட்டால் சண்டைக்கு வந்துவிடுகிறார்கள். இந்த மெண்டாலிடியை கொஞ்சம் ஆராயவேண்டும்!

Mar 28, 2009

LB


Let me say it outright -I'm not a fan of superstitious beliefs and practices that are followed in Hinduism and temples. Most of them make no sense, are silly, outdated, barbaric and idiotic. Or so I thought.

When I read of the opinion that Saravana Bhavan 'annachi' was awarded life sentence in a murder trial even as he encountered to build a temple for the Lord Balaji (LB) of Thiruppathi, it was yet another superstitious belief. I dismissed it outright. If at all anything, his sentence just proved that "truth alone triumphs (sometimes)" -reflecting the title of a Sujatha novel "வாய்மையே (சிலசமயம்) வெல்லும்”.

It so happened that LB 'crossed' me quite unexpectedly yesterday (Mar-25, Wed), when I had met with Prakash machan (a cousin of Vanishree) here in Osaka. Of the hundred nostalgic recollections we talked till late night -walking across the streets of Osaka, he was referring to his visit to Thiruppathi, with a remark, rather unexpectedly though, that "You know, to go to Thiruppathi, it is not enough if you alone decide. The 'invitation' has to come from the LB - meaning, he 'MUST" approve your meeting Him..."

I talked to a couple of my AP colleagues here in Japan about such myths about LB, and learned the following:

(a) It is a widely accepted belief that in one form or the other, one would 'feel' the invitation from the LB. It could be by way of a friend/relative asking you to accompany him to Thiruppathi, or a business trip close to a locality near Thiruppathi or simply a sudden crave to travel to Thiruppathi.

(b) There is also a belief that anybody who had attempted to build an LB temple with his 'own' money had had to bite the dust. LB would only accept a temple built with donors' contributions.

Musing over these superstitious beliefs for a while, I began to realise the ultimate objectives of these 'beliefs'.

First, is it not true Godliness that refuses a temple built with the money power of a single individual? In a way, it discourages the rich people from flaunting their money power by building temples. Undoubtedly, this removes the disparity between the rich and the poor, when it comes to glorifying God. This belief dismisses the significance of being rich in religious matters.

The second point is appealing too -it says, you can't just like that travel and worship LB at your convenience, though your stature in the society would make it easy to do so. It is aimed, rather tacitly, at dismissing the rich & the powerful from flocking to Thiruppathi just because they have the amenities & convenience to do so. Is there any better way one could establish equality among pilgrims?

Long back I had understood the explanation for tonsuring in temples; that is the ideal way for one to present himself in absolute humility. This also explains the practice followed in the southern districts of TN where sons tonsure at the time of the death of their parents.

A friend of mine here with whom (along with others) I have done 4 hikes over the mountains in Japan, told me while discussing LB, that people used to go for a hike on the 7 hills of Thiruppathi. Another friend said that his 12th Gr son did the hike in Thirumalai last time. The word 'hike' attracted me.........

And here is The Point: I'm not writing this to say that I've "got" the official invitation to go to Thiruppathi. But the turn of events and the messages that reached me in quick successions would all 'add up' and make one think that this IS the invitation...? Falling into superstitious beliefs is always that easy!

Mar 23, 2009

பெரியப்பா

ஆயிற்று, பெரியப்பாவும் மறைந்து இன்றோடு ஒரு வருஷம்.

பெரியப்பா என் இன்றைய வாழ்க்கைக்குப் பின்னால் ஆதரமாக இருந்த - மிகச் சிலரில் முக்கியமான நபர். மிக எளிய பிண்ணனியில், மிகச் சாதாரண வாழ்ந்து, அடுத்த ஜெனரேஷனை முன்னுக்குத் தள்ளியவர். பெரியப்பாவின் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்க்கையில், 'ரோல் மாடல்'களை வீட்டுக்கு வெளியே தேட வேண்டியது இல்லை என்று உணர்கிறேன்.

மறைந்த கனகசபாபதி பெரியப்பாவும், எங்கள் பெரியப்பாவும் ஏதோ விஷயமாக சென்னை வந்திருந்தபோது, என்னைப் பார்க்க திடீர் விசிட் கொடுத்தார்கள், கிண்டி கல்லூரிக்கு. கனகசபாபதி பெரியப்பா அப்போது திருச்செந்தூர் கல்லூரி முதல்வராக இருந்ததால் கிண்டி கல்லூரி முதல்வரைச் சந்தித்து, என் விவரங்களைக் கூறி, நான் வகுப்பிலிருந்து அவர்களைப் பார்க்க முதல்வர் அறைக்குச் சென்றேன். சம்பிராதய விசாரிப்பில் சில நிமிடங்களே சந்தித்தாலும், என்பொருட்டு இரண்டு பேரும் மெனக்கெட்டு என்னைப் பார்க்க வந்ததை நான் மறக்கவே இல்லை. பல வருஷம் கழித்து "நாங்க திடீர்னு வந்து உங்க பிரின்ஸிபல் கிட்ட சொல்லி உன்னை அழைத்ததும், நீ வகுப்பில் இருந்து வந்தது, அண்ணனுக்கு (கனகசபாபதி பெரியப்பாவிற்கு) ரொம்ப மகிழ்ச்சிடா..." என்று சொன்னார், பெரியப்பா.

சென்ற வருஷம் அவர் நினைவாக எழுதியது....




It has been a month now since our periyappa T.Rathna Sabapathy expired (on March-23, 2008). Prabha-akka & Dinakar had flown from Canada & USA. Prabha-akka was there till the 16th day. I was there to attend the funeral that took place on March-25, 2008 in Kulaiyankarisa, and returned to Japan on March-31.

At 74-75, our periyappa dying of heart attack was something hard to digest for me, as he had had no symptoms, and had not had any factors identified by the medical world for a potential heart failure. No family history, no over-weight, no cholesterol-high food habit, and no sedentary lifestyle. As a man who could never be seen at home after 5 am in the morning (he would have gone to the paddy fields), and one whom I don't recall of walking at a slow pace ever... he had every reason to stay healthy for the next 12-15 years. In a way, he shattered all that I have known of heart failures so far. His busy schedule in his last one week in visiting nearby towns looking for 'supports' to protect plantain trees from the rains would not make one imagine that he'll be in ICU for chest pain in the next 3-4 days...

With him gone the 2nd generation Head of the family tree of Thangamni Nadar. He will ever be known for his simple lifestyle; I always wonder how one could be this active in life, without having any of the leisure activity or hobby or simply 'things that he likes' to do! He was also greatly successful in alienating himself from the quintessential characteristics of a KKarisal resident; to appreciate this, you must know that in KKarisal there is hardly anyone that doesn't drink or take to weapons to settle scores. (An old man that attended funeral, knowing that I am the son of Samboorna Sabapathy, recalled how close he was to my father and periyappa, and ended his statement saying he had stabbed 7 persons thus far!).

I began to realise the greatness of our periyappa soon after I started doing my engineering in Anna University (1979-84). It is well-known that agriculature would not yield a constant & regular income; with all the uncertainties, our periyappa was financing 5 of us (Prabhakar annan, myself, Dinakar, Sarumathi & Ravi) who were doing their college staying in hostel. When a number of my colleagues would default in paying hostel dues, I had never defaulted -thanks to the prompt money transfers from our periyappa. Along with our grandfather, our periyappa also took every effort to keep us away from getting attracted to doing farming. My b-i-l Vasikaran would always recall how 'casual' & 'free' I was during Sarumathi's wedding without caring anything about the finances -as it was all managed by our periyappa. (Vasikaran's sister Suganthi got married at the same time frame; and ke knew what he had gone through).

Periyappa had a humble beginning in life -I have seen him driving bullock-cart in KKarisal. On the repeated family troubles we had gone through, he said, sometime last year: "We don't know what to do.. we have been working hard, and are honest in what we do.. we don't even imagine of being bad to others, and we have been worshipping our Family-Goddess (kula theivam) promptly on all occasions, even then such things happen; I don't know why..... ". How naive of him! My Aminjikarai chithappa recalled our periyappa's role, among others, in ensuring that we were not left alone after 1970 when my father died. In his own words: ""உங்க வீட்டிலே உங்க பெரியப்பா ‘சரியா’ அமைஞ்ச ஆளு; நல்ல ஆளு. இப்படி ஒரு ஆளு அமையலைன்னா நீங்கள்லாம் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்கப்பா...."

Undoubtedly, periyappa stood as a great personality whenever we needed the most–and here I'm talking about a timespan of three decades and more.

It is painful to see simple people leading simple life yet making huge difference in my life vanish 'just-like-that' as the year passes by.