Dec 6, 2009

சோமபானம் -பின்னோட்டங்கள்

Manicks: Just so we can have a cautionary point of view, Nagaraj, may I?
The American Heart Association (AHA) cautions people NOT to start drinking if they do not already drink alcohol. If you already drink alcohol, do so in moderation.

Drinking MORE alcohol increases other dangers such as alcoholism, high blood pressure, obesity and stroke. Most importantly, it is not possible to predict who might become alcoholic. One can progress from social drinking to alcohol dependence, a state that is characterized by the craving for, loss of control or withdrawal symptoms.

There have been studies showing some association between drinking red wine and reduced mortality due to heart diseases. Others have examined the potential benefits of the COMPONENTS in red wine such as flavonids and other antioxidants (as Nagaraj has pointed out, resveratrol in wine might be available in capsule forms in a few years). Some of these components may be found in other foods such as grapes or red grape juices. Some studies also caution that the association may be due to other lifestyle factors rather than alcohol. Like increased physical activity (as might have been the case in the army where Nagaraj saw the benefits) and a diet high in fruits and vegetables and lower in saturated fats (that means less fried foods - French fries are from Belgium, by the way !!).

No direct comparison trials have been done to determine the specific effect of wine or other alcohol on the risk of developing heart disease or stroke.

Having said all that, let me go and enjoy some good wine (more than one glass) in the company of friends and family at our Thanksgiving Dinner in a couple of hours. Happy Thanksgiving to those here in the USA and Happy Holidays to those of us back in India !!
P.S. Do not drink and drive.

AJB: மதுவைப் பற்றி உன்மடல் பல நிகழ்வுகளை மனதில் ஒரு பிளாஷ் பாக் ஓட செய்தது. இதுவரை மதுவை குடிக்காமல் இருந்து வருகிறேன். ( ஆமாம், நாகராஜன் முதல் முறை ஒயின் சுவைக்க செய்தான் என்பதை தவிர!). சின்ன வயதில் பலரை குடியினால் கெட்டு அழிந்தமை கண்டு அறவே அதை வெறுத்து, அம்மாவின் அறிவுரை படி இன்னும் தொடர்கிற என்னை போன்ற சிலர் படும் பாடு வேறு. ( அது ஏன் அம்மாக்கள் தான் இந்த தடையை அதிகம் விதிக்கிறார்கள் - May be, evolution has an answer, with male species risking drinking may die early leaving the children helpless and therefore female think that it is important to ensure safety of the family - although this may be changing slowly now!).

பல சுழலில் குடிக்காதவர் படும் பாடு பெரும் பாடு. கல்யாணமாகும் முன் , பலமுறை பேச்சிலர் ( bachelor) வீடுகளில் பார்ட்டி வைத்து, ( குடித்து கும்மாளம் அடித்துவிட்டு - நண்பர்கள் மன்னிக்க - இந்த வார்த்தை தொடர் நன்றாக இருகிறதால் எழுதினேன்!) செய்த குப்பைகளை - பாட்டில்களையும் - வாந்தியையும் - சுத்தம் செய்யும் போது பலமுறை சண்டை வருவது போல் முடியும்.

மற்றும் வேலை சுழலில் குடிக்காதவனின் பாடு மிகவும் மோசமானதே. குடிக்காதவர்களை பெரும்பாலும் குடிப்பவர்கள் நம்புவதில்லை. இதனால் குடிக்காதவர்கள் தனிமை படுத்த படுகிறார்கள். அனேகமாக ஒரு பழ ராசா கோப்பையை ஏந்தித் திரிய வேண்டி இருக்கும், முதல் முறை பார்ப்பவர்கள் - கேட்கும் கேள்வி - "என்ன இது?..." எனவே முடிந்தவரை கிளாசில் சரியான கலரைக் கொண்ட சாஃப்ட் ட்ரிங்கை தேர்தெடுக்க வேண்டும், குடிப்பவர்கள் அடிக்கும் ஜோக்குக்கு , சிரிப்பு வரவில்லை என்றாலும் சிரிக்க முயல வேண்டும். பசி அதிகரிக்கும் இதனால் ஜூசை அதிகம் குடிக்க வேண்டியிருக்கும். சைடிஷை அதிகம் சாப்பிட வேண்டிருக்கும். அநேகமா சைடிஷ் மிக காரமாக இருக்கும். மெயின் கோர்ஸ் சாப்பிட டிலே ஆகும்,

இதெல்லாம் கருதி பலமுறை குடிக்க பழகலாம் என்று என்னைத் தூண்டும். ஆனால் நண்பர்களில் சிலர் குடிக்காத நிலையைப் பாராட்டி பேசும் போது இந்த ஆவல் குறையும், மீண்டும் அடுத்த முறை இந்த அனுபவம் வரும்வரை! இந்த மாதிரி ஒரு நிலையில் தான் என்னை நாகராஜன் பிடித்துவிட்டான்.

என்னோடு இங்கே ராஜேஷ்வர் முற்றும் சரவணன் இந்த அனுபத்தைக் கொண்டிருப்பார்கள் என எண்ணுகிறேன்.

Pagals: எந்தவொரு கெட்ட(!) விஷயத்திலும், முதல் பரிச்சயம் பலருக்கும் நினைவிலிருந்து "தள்ளாடி தடம் புரளாமல்" இருக்குமென்றுதான் நினைக்கிறேன். :-))

ஐந்தாம் ஆண்டு முதல் செமஸ்டரின் போது, EEE வகுப்பு மாணவர்கள் எல்லோரும் ஊட்டிக்கு சென்றபோது, அடியேனுக்கு நேர்ந்ததும் அப்படித்தான். நீலகிரி எக்ஸ்ப்ரசில் இரவுப் பயணம். காட்பாடியிலோ அல்லது ஜோலார்பேட்டையிலோ ரயில் நின்றபோது சாம்சன் ரவீந்திரனின் அண்ணன் ஓரிரு பாட்டில்களைக் "கை மாற்றி" பாசம் பொழிந்து (!)சாம்சனையும் உடன் வந்திருந்த எங்களையும் வழியனுப்பினார். அதன் பின்பு, வண்டி புறப்பட்டதும் சாம்சன் மற்றும் EEE-யின் "ஐவர் படை" (the famous Five Men Army) டீ கிளாசில் லாவகமாக பாட்டில் திரவங்களை ஊற்றி (பிராந்தி, விஸ்கி, ரம்), கையாலேயே ஒரு "கரைசல்" (cocktail) செய்து எல்லோருக்கும் ஒரு டம்பளர் ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொன்னதும் அடியேன் பலமுறை போலியாக மறுத்து பின் அதை வாங்கி ஒரே மடக்கில் உள்ளே தள்ளியது மட்டும்தான் எனக்கு நினைவு இருக்கிறது..!

அதன்பின், இரவு முழுதும் நானும் தூங்காமல், மற்றவர்களையும் தூங்கவிடாமல் பாடுபடுத்தியதும், குறிப்பாக, நான் படுக்கவேண்டிய upper berth-க்கு கால் வைத்து ஏற, கீழ் பெர்த்தில் இருந்த ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணியை ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை, "எக்ஸ்க்யூஸ் மீ" என்று ’சத்தாய்த்தது’ எதுவும் என் நினைவில் இல்லை.!! எல்லாம் அடுத்த நாள் ஊட்டி சென்றடைந்ததும் சாம்சனும் மற்றவர்களும் சொல்லி கிண்டல் செய்தபோதுதான் தெரிந்தது - "மப்பின் மகிமை" புரிந்து, அது கொடுத்த தலைவலியால் பிற்காலத்தில் Bloody Mary போன்ற கலப்புக் கரைசல்களைக்
கவனமாகத் தவிர்க்க முடிந்தது..!!

எப்போதோ போட்டதை இப்போது "உளற" வைத்துவிட்டாய் நீ..!! :-)
.

0 comments:

Post a Comment