Apr 1, 2010

சேர்ந்து வாழ்ந்தார்?


திருமணத்திற்கு முன் ஒரு
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் (cohabiting) மேல்நாட்டு வழக்கம் நம்மால் ஜீரணிக்க முடியாதது. நம் கலாச்சாரத்தை ‘ஆ, ஊ’ என்று புல்லரித்து, மேல்நாட்டவரை ‘சீ’ என்று பார்ப்பவர்களுக்கு இது ஒரு ‘லட்டு’ மாதிரி பாயிண்ட். என்னதான் தனிமனித உரிமை அது, இது என்று மேல்நாட்டவர் சொன்னாலும், பின் திருமணம் என்ற ஒன்றை ஏனய்யா இன்னும் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்கத் தோன்றும். ’திருமணத்திற்கு முன் உறவு’ (premarital sex) என்பதும் நம்மூரில் கிட்டத்தட்ட இதே நிலையில் சிலவருடம் முன் வரை இருந்தது; இப்போது அங்கங்கே ‘இலைமறை காயாக’ நடந்து வருகிறது -அதை ஓப்பனாக ஒத்துக்கொள்ளும் அளவுக்கு இன்னும் நாம் தேறவில்லை. திருமணமாகாமல் குழந்தை என்பது நம்மூரில் நினைத்தும் பார்க்க முடியாதது; அமெரிக்காவில் சகஜம். (சென்றமுறை என் மகளுடன் அவள் ஹைஸ்கூலுக்குப் போனபோது சில மாணவிகள் புகை பிடிப்பதைப் பார்த்து ‘திடுக்’கிட்டேன். "Oh dad, some have even babies" என்றாள் மகள்! )


நான் எழுத வந்தது அதைப் பற்றியல்ல. சமீபத்தில் இந்திய சுப்ரீம் கோர்ட் சேர்ந்து வாழ்தலும், திருமணத்திற்கு முன் உறவும் சட்டப்படி எந்த வகையிலும் குற்றமல்ல என்று சொல்லியிருக்கிறது. நமக்குத் தெரிந்தது தான்; அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. அந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருபடி மேலே போய் சேர்ந்து வாழ்தலுக்கு ஆதரவாக இந்து மதத்திலிருந்து கிருஷ்ணன் - ராதாவை உதாரணம் காட்டி பேசியிருக்கிறாரே, அது தான் என்னைக் கவர்ந்தது!

னக்குத் தெரிந்தது கிருஷ்ணன் நம்ம மு.க. போல் மனைவி, துணைவி என்று பாமா-ருக்மணியுடன் வாழ்ந்தது மட்டும்தான். ராதாவுடன் சின்ன வயதில் ‘அப்படி, இப்படி’ சில்மிஷம் பண்ணியதாகவும், ராதா அந்த ‘கிக்’கிலேயே ஏங்கியதாகவும் தான் படித்திருக்கிற்னே தவிர, அவர்கள் சேர்ந்து வாழ்ந்தது பற்றித் தெரிந்திருக்கவில்லை. சு.கோ.நீ. சொல்லியிருப்பதாலும், பி.ஜே.பி. கண்டனம் கூடத் தெரிவிக்காததாலும் நிஜம் என்றே நம்ப இடமிருக்கிறது. சேர்ந்து வாழ்ந்த கடவுளை வணங்கும் நாட்டில் அந்த வழக்கம் சுத்தமாக இல்லாமல் போய் எல்லாம் ‘முறைப்படி’ என்று ஆயிற்று. முற்றும் துறந்த முனிவராக ஒரு முறையோடு வாழ்ந்த ஜீசஸை வணங்கும் நாடுகளில் முறையில்லாமல் வாழ்வதே முறையாகிவிட்டது. முரண்!

டுத்தமுறை தீபிகாவுடன் கிறுஷ்ணன் கோவிலுக்குப் போகையில் சந்நதிக்கருகில் நின்று “இன்னா நைனா, சின்ன வயசில குளிக்க வர்ற பெண்கள் கிட்ட சேலை திருடறது, சேர்ந்து வாழ்தல்ன்னு படா கில்லாடியா இந்துகீறே..! கலக்கிட்ட மாமூ..” என்று சொல்லவேண்டும். (முன்பொருமுறை எம்பெருமான் திருமுருகக்கடவுள் வள்ளி-தெய்வானையுடன் திருக்காட்சி அருளும் திருச்செந்தூர் கோயிலில் "எனக்குப் பிடித்த கடவுள் முருகன் தான்" என்றேன். அவள் ஏன் என்று கேட்கவில்லை).

0 comments:

Post a Comment