(Re-posting of what I wrote on 17-Jun-2008) நெட்டில் லேட்டஸ்ட் திரைப்படங்களைத் தேடிப்பிடிப்பதில் தீபிகா கில்லாடி. விகடனில் முதல் விமர்சனம் வரும் முன் படத்தைப்பார்த்தால் தான் அவளுக்கு திருப்தி. (சிவாஜியின் "சஹானா" பாடல் எப்போதோ கேட்டாயிற்று...) மிகுந்த ஆர்வத்துடன் அவள் நெட்டில் June-13 முதல் தேடியது "தசாவதாரம்". கிடைக்கவில்லை. நம் மக்களின் review வேற அவள் pulse-ஐ ஏற்றியது...போதாக்குறைக்கு சென்னையிலிருந்து தீபிகாவின் அக்கா படத்தைப் பார்த்து "நல்லாத்தான் இருக்கு...ஆனா சில scenes அவ்வளவா புரியலை..." என்றதும், நான் உடனே "அப்படின்னா ... படம் Super-ன்னு அர்த்தம்" என்று சொல்லிவைக்க, எதிர்பார்ப்பு இன்னும் கூடியது. சனிக்கிழைமை தான் சென்னை சென்ற பிள்ளைகள் இரண்டுபேரும் 'பிரார்த்தனா'வில் பார்த்ததாகப் புல்லரிக்க.... You Tube-ல் கிடைத்த bit-களை உதறித்தள்ளிவிட்டு.... நேற்றுதான் அடித்தது Luck!
"VoW, தசாவதாரம் முழு படமும் upload பண்ணியிருக்காங்க..." என்று விசிலடிக்காத குறையாய் அவள் கூச்சலிட... படம் முழுவதும் download செய்து (2-3 நிமிஷம் தான்), பசங்க இந்தியா போய்விட்டதால் இன்றிரவே பார்த்துவிடலாம் "ஒரு கை" என்று தீர்மானித்து, PC--TV connection தயார் பண்ண ஆயத்தமாகி, light எல்லாம் dim பண்ணி, quick-ஆ ஒரு "ambience" set-up செய்து, படத்தை ஆரம்பித்தால்.....
"ஜெமினிகணேசன், பானுமதி நடித்த தசாவதாரம்" நாதஸ்வரம், மேளத்துடன் ஓடுகிறது.......!! சே... upset of the day!
Jan 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
Annan! Doesn't Madhu has a distant look of Sarumathi Akka and a closer look of your Kayal Patti.
Post a Comment