Jan 24, 2009

தசாவாதாரம் -part 2

(Re-posting of what I wrote on 26-Jun-2008)
---------------------------------------------------------------------------------
Tsunami, நாத்திகர்களுக்கு 'லட்டு' மாதிரி. "கடவுள் அன்பானவர்' அது, இது என்று வாய் கிழியப் பேசுகிறீர்களே, இதான் அவர் அன்பின் லட்சணமா?" Die hard நாத்திகனான கமலும் இந்தக்கேள்வியைக் குறைந்தது 10 பேரிடம் கேட்டிருக்கக்கூடும். மாறுதலுக்கு ஒரு ஆத்திகன் பார்வையிலிருந்து இந்தக்கேள்விக்கு கமல் விடை தேட, கிடைத்தது 'தசாவாதாரம்' கதைக்கரு. இந்தியாவிற்கு தவறுதலாக courier ஆகும் bio-tech அபாயத்தைத் துரத்தி அமெரிக்க வில்லன் நம்மூர் வர, கதை வேகம் பிடித்து, அசினையும் பெருமாளையும் தூக்கிக்கொண்டு ஓடி, இன்னபிற கமல்களை சந்தித்து,தமிழ்கத்தின் சுனாமி தினத்தன்று முடிகிறது.

கதையில் முழுக்க வரும் அமெரிக்க வில்லன் Terminator-கமலுக்குதான் என் வோட். கதையின் outline கிடைத்தவுடன் கமல் மனதில் இந்தப் பாத்திரமும் பலராம் நாயுடு (inspiration - பாலையா?) மற்றும் விஞ்ஞானி பாத்திரங்கள் மட்டுமே இருந்திருக்கவேண்டும். அப்புறம் படிப்படியாக ஆசைகள் வளர்ந்து...(இருக்கவே இருக்கிறது கமலின் கூடப்பிறந்த passion!) படத்தில் அங்கே, இங்கெ என்று எல்லாம் கமல் மயம்! கதைக்குத் துளியும் தொடர்பில்லாமல் கதையின் வேகத்தைத் தடுக்கும் மற்ற கமல்கள் -அந்த பஞ்சாபி, ரங்கராஜன் நம்பி, மண் பாதுகாவலர், புஷ், பாட்டி, Japanese -எல்லோருமே அநாவசியமான இடைச்செருகல்கள்; கவனக்கலைப்புகள். தீபிகா முதலிலேயே பார்த்துவிட்டு "இது கமல், அது கமல்" என்று commentary கொடுத்தவண்ணம் இருக்க, "அசின் போலவே தாவணியில் ஒரு character வருதே, அதுகூட இன்னொரு கமல் தான்" என்று சொல்லிவிடுவாளோ என்று பயந்தபடிதான் பார்த்தேன்.

கதையின் மிகப்பெரிய weakness ஒவ்வொரு அவதாரத்திற்குப் பின்னும் ஒரு கிளைக்கதை அமைத்து அதை main track-உடன் கோர்வையாகக் கொண்டுவர முடியாமல் போனது. Chaos theory, Butterfly effect என்று ஆழமான ஆசைகள் இருந்தும் திரைக்கதையில் கோர்வையாக வெளிப்படவில்லை. அவசரத்தில் செய்த collage மாதிரி...

மற்றபடி திரைக்கதையை மறந்து, கமலின் personal album பார்த்து ரசிக்க விரும்பினால் 10 அவதாரங்களும் superb -அதிநவீன மேக்கப் உத்திகளிலும், look-speech-mannerism என்று ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் கமலின் திறமையாலும். பாட்டி உடல் சுருங்கி சின்ன உருவமாக வருவது கமலுக்கு மட்டுமே சாத்தியம். புஷ்ஷின் அமெரிக்க உச்சரிப்பும் அப்படியே. Japanese மேக்-அப் சொதப்பல் என்றாலும், தங்கை கொலைசெய்யப்பட்ட தகவல் தருபவனிடம் "நன்றி" ("arigato gozaimasu") என்று ஜப்பானியக் கமல் சொல்வதில் Japan culture-ஐக் காட்டவேண்டுமென்ற நுணுக்கமான தீவிரம் தெரிகிறது. (உச்சரிப்பில் இன்னும் கவனமாக இருந்திருக்கலாம்). அமெரிக்க வில்லன் கமல் ஜப்பானியக் கமலை நோக்கி துப்பாக்கியை நீட்டியவாறு: "You remember Hiroshima?" ஜ. கமல்: "Remember Pearl Harbor" போன்ற வசனங்களின் அமெரிக்க விரோதத்தை ஜப்பானே மறந்தாயிற்று!

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் கிட்டத்தட்ட al-queda லெவெலுக்கு நடந்த தீவிரவாத சரித்திரம் எனது சிற்றறிவுக்குத் தெரிந்திருக்கவில்லை. தேடிப்பிடித்து அந்த சம்பவத்தை இணைத்திருப்பது, "இந்துக்கள் மட்டும் என்ன வாழ்ந்ததாம்? எல்லாம் அடி, தடி கோஷ்டிதான்" என்று நாத்திகக் கமல் காட்ட விரும்பியதாகத் தெரிகிறது. Hey Ram கமலில் தெரிந்த அதே ஆணவம் ....(இந்த ஆள் எப்படிய்யா ஒரு ஐயங்கார் வீட்டிலே பிறந்தான்..?!) ஆரம்பத்தில் Braveheart தரத்தில் வரும் அந்தக் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், main track-உடன் ஒட்டமறுக்கின்றன.

கடவுளை நம்பாதது போலவே கமலுக்கு காதலிலும், கல்யாணத்திலும் நம்பிக்கையில்லை என்பது தெரிந்ததே. அதனால் தானோ என்னவோ, படத்தில் காதல் காட்சிகளோ, டூயட்டோ இல்லை. தமிழில் யாப்பு range-க்கு கவிதை பாடும் பஞ்சாபி கமல் குண்டடி பட்டு cancer குணமாவது நல்ல சர்தார்ஜி ஜோக்! வசனங்களில் சரளமாகத் தெளித்திருக்கும் நாத்திகம் படத்தின் plus point. ("கடவுள் இல்லைன்னு யார் சொன்னா? இருந்தா நல்லாயிருக்கும்னுதானே சொல்றேன்...").

கமலின் magnum opus? ம்ஹூம் .....காத்திருக்கலாம்.

0 comments:

Post a Comment