May 15, 2009

அமெரிக்கா -மின்னல் ’விசிட்’


மெரிக்காவிற்கு சில காலம் கழித்து இரண்டு வார விடுமுறையில் ’மின்னல் விசிட்’ அடிக்க நேர்ந்தது.

2000-ல் எங்களுடன் வாடகை அபார்ட்மெண்ட்களில் ஒன்றாக H1-Bயில் தொடங்கியவர்கள் எல்லோரும் கிரீன் கார்ட் முடிந்து, அமெரிக்கக் குடியுரிமை பெற்று (ஒபாமாவிற்கு வோட்டும் போட்டு, சரித்திரம் மாற்றி எழுதியதில் சாட்சியாகி), dual citizenship பற்றி யோசனையில் இருக்கிறார்கள். குழந்தைகள் Gifted Students முத்திரையுடன் பள்ளிகளில் மேலே ஏற, இவர்கள் 4-பெட்ரூம் வித் ஸ்விம்மிங் பூல் வீடுகளை 30 வருஷ லோனில், 2005-ல் housing market உச்சிக்குப் போகுமுன் வாங்கியதில் மகிழ்கிறார்கள். விடுமுறைகளில் பிள்ளைகளை இந்துக் கோவிலில் SAT தேர்வுக்குத் தயார் செய்ய, அல்லது நடனம் கற்றுக்கொள்ள அனுப்புகிறார்கள். அவ்வப்போது நண்பர் குடும்பங்களுடன் Get-together வைத்து (மறக்காமல் வெஜிடெபுள் சமோஸா சாப்பிட்டு) economy crisis ல் அமெரிக்கர்களின் மடத்தனத்தை எள்ளி நகையாடுகிறார்கள். (”எள்ளி” என்றால் என்ன?) தமிழ்/தெலுங்கு புத்தாண்டுகளில் கோவில் ஹாலில் கூடி, “முகுந்தா, முகுந்தா..” தசாவாதாரம் பாடலுக்கு தம் டீன் -ஏஜ் பெண்களைத் தாவணி, ஒட்டியாணம் அணிந்து டான்ஸ் செய்யவிட்டு வீடியோ எடுத்து You Tube-ல் மேலேற்றுகிறார்கள். சனிக்கிழமைகளில் இந்திய நண்பரின் வீட்டில் 10-12 தன்வயதோருடன் லலிதா சகஸ்ரநாமம் செய்ய வைக்கிறார்கள். இல்லத்தரசிகள் டீ.ஏ.பெ.கள் இந்திய கலாச்சாரத்தில் வளர வேண்டிய அவசியம் பற்றி கவலைப்படுகிறார்கள்; தோழிகளுடன் (இந்தியத் தோழிகள் மட்டுமே அனுமதி) சினிமா போக ஆசைப்பட்டால் அவர்கள் அணியும் லோ-நெக் டி---ஷர்ட்டுகளைக் கவனிக்கத் தவறி அல்லது கண்டிக்கத் திராணியின்றி, ‘பொத்திப் பொத்தி’ தியேட்டருக்குக் கூட்டி வந்து, (படம் முடியும் வரை வெளியே ஷாப்பிங் செய்து) கூட்டிச் செல்கிறார்கள். வளர்ந்த பெண்களின் பெற்றொர்கள் மாப்பிள்ளை தேடுகிறார்கள் “இங்கேயே பிறந்து வளர்ந்த இந்தியப் பையன் தான் சரிப்படும். நம்ம ஊரிலிருந்து வந்தால் “Why are you late today?" என்பான்; இவள் லாயரைப் பார்க்கக் கிளம்பிவிடுவாள்...”.


மெரிக்காவில் வீட்டு விலை வீழ்ச்சி பற்றி உலகமே பேசிக்கொண்டிருக்க, எனக்கும் ஒரு நப்பாசை -’கொஞ்ச’ விலையில் ஒன்றைப் பிடித்துப் போட்டால் என்ன? ஆர்லண்டோ லேக்-மேரி பகுதியில் விலையில் அவ்வளவாக வீழ்ச்சி இல்லை -2004-ல் நாங்கள் விற்ற விலை அளவில் தான் இருக்கிறது. (3-bed 2000 sq ft heated area single family home with excellent interiors and lake-view now goes for -US$ 270K; was 450K a couple of years ago). முடங்கிய வங்கிகளால் முடக்கப்பட்ட அபார்ட்மெண்ட்கள் (condo) Buy-one-Get-one-FREE ரேஞ்சில் அசத்தல் விலையில் கிடைக்கின்றன. 1300 sq ft 3-bed 2-car garage வீடுகள் 70-80 K யில் நல்ல இடத்தில் வாங்கிவிடலாம். (was 200K last year; was 300K a couple of years ago).


ண்பர்கள் என்னை எதிர்பார்க்கவில்லை. திடீரென்று லோகேஷ் வீட்டிற்குப் போனபோது “நீயா? ஷிபு என்று நினைத்தேன்” என்றான். கோயிலில் ஒரு சனிக்கிழமை அதிகாலையில் காரிலிருந்து இறங்கி உள்ளே போய் கோயிலைச் சுற்றுகையில் பின்னால் வந்த ஜெயந்த் “அட நீயா...? கார் பார்க்கிங் ஏரியாவில் தீபிகா யாருடனோ காரை விட்டு இறங்கிப் போவதைப் பார்த்தேன்; தீபிகா அவ்வளவு ’அட்வான்ஸ் டைப்’ இல்லையே என்று யோசித்தேன்..” என்றான். ”கலிகாலம்!” என்று நினைத்ததை சொல்லவில்லை.


Swine Flu கலக்கிக்கொண்டிருந்தது, நான் ஆர்லாண்டோவில் இறங்கிய இரண்டு நாட்களில். ஜப்பானின் என் பாஸ் அங்கே இங்கே விசாரித்து, என் ஆர்லாண்டோ நம்பரில் என்னைப் பிடித்து, தினசரி body temperature பார்த்துக் குறிப்பெடுத்துக்கொள்ளச் சொன்னார். காய்ச்சல் அல்லது ஏதாவது அறிகுறி தெரிந்தால் கேள்வியின்றி வாரக் கணக்கில் விடுமுறை தருவதாகச் சொன்னார். (மறக்காமல் இரண்டு நாள் கழித்து மறுபடியும் போன் செய்து உடல் ‘நிலவரம்’ விசாரித்தார்). சான் ஃபிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் ஒஸாகா ஃபிளைட்டிற்குக் காத்திருந்த அத்தனை ஜப்பானியர்களும் mask அணிந்திருந்தனர். Fluவின் நிஜ தாக்கம் ஒஸாகா ஏர்போர்ட்டில் விமானம் இறங்கியதும் தான் தெரிந்தது. பயணிகள் யாரையும் கீழே இறங்கவிடாமல், இரண்டு டாக்டர் குழுக்கள் 6-7 நர்ஸ்களுடன் தலை-முதல்-பாதம் வரை உடம்பு முழுவதும் அங்கி மற்றும் கண்ணுக்கு goggle அணிந்து biological WMDயைச் சந்திக்கத் தயாராகும் இஸ்ரேல் ராணுவ வீரர் போல் விமானத்திற்குள் நுழைந்து, பைலட், ஏர்ஹோஸ்டஸ் விடாமல் ஒவ்வொரு பயணிக்கும் body temperature பார்த்து -இரண்டரை மணி நேரம் நிறுத்திய விமானத்திற்குள் சிலையாக உட்கார்ந்திருந்தோம். எல்லாம் முடிந்து இறங்கியவர்கலின் கைகளில் anti-bacterial கிரீம் தடவி விட இரண்டு பேர். விமானத்தில் ஒருவருக்கு flu symtoms இருந்தாலும் மொத்த விமானமும் நாடு கடத்தப்படும் அல்லது ஆளில்லாத் தீவில் இறக்கப்படும் என்று தோன்றியது.

0 comments:

Post a Comment