Oct 10, 2011

Billy Goat Trail

ப்பானில் ‘திகட்டத் திகட்ட’ hiking போன கையோடு, வெர்ஜீனியா வந்ததும் அங்கங்கே மலைகள் தென்பட்டதால் hiking trails பற்றித் தேடி…. வீட்டுக்கருகிலேயே சுமார் 8 மைல் தொலைவில் Billy Goat Trail இருப்பதைக் ‘கண்டு பிடித்தேன்’.

மெரிக்காவின் அகன்ற, பரந்த, விரிந்த காடுகளிலும் மலைகளிலும் hiking செல்வது பற்றி உள்ளுக்குள் கொஞ்சம் பயம். என்ன இருந்தாலும் ஜப்பான் மலைகள் மாதிரி அவ்வளவு safe ஆக இருக்காது என்ற எண்ணம். மேலும் 2 மாதம் முன் தான் “127 hours” பார்த்திருந்தேன். அந்தப் படம் சமீபத்தில் நடந்த உண்மைக் கதை என்று தெரிந்து இன்னும் கலக்கம். Hiking trail களை Easy, Moderate, Difficult என்று தரம் பிரிக்கும் வெப்சைட்களில் Billy Goat Trail குறித்து Very Difficult, dangerous என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்கள்.

மிக ரம்மியமான மலையில், பக்கத்திலேயே 'சல;சல' என்று சின்ன சத்தத்துடன் ஓடும் நதிக்கு அருகில் trail ஆரம்பிக்கும் இடம் -Great Falls Tavern -மனதிற்குத் தெம்பாக இருந்தது. ஒரு சின்ன ரூம் போன்ற கட்டடத்தில் இயங்கும் Great Falls tavern Visitor Centerல் hiking trail map தருகிறார்கள். ஆரம்பிக்கும் இடத்திற்குப் பக்கத்திலேயே biking trail ம் இருப்பதால் bikers, runners என்று அந்த இடம் நல்ல கூட்டம். Bike trail ஐ விட்டு விலகி மலை ஏறத் தொடங்கினால், hike செய்பவர்களும் அதிகம். கல்லூரி மாணவ மாணவிகள், குடும்பத்தினர் என்று இவ்வளவு பேர் hike செல்லும் trail நான் எங்கும் பார்த்ததில்லை! (கொஞ்சம் பேசிப் பார்த்தால் எல்லோரும் அங்கு வழக்கமாக் hike செல்பவர்கள்

Trail முழுவதுமே பாறை, பாறை, பாறை தான்! தொடர்ந்து பாறைகள் மீது நடப்பதற்கும் தாண்டுவதற்கும் கொஞ்சம் பேலன்ஸ் செய்யத் தெரிந்தால் மட்டும் போதும் மற்றபடி trailல் elevation gain 'ஏற்றம்' அவ்வளவாக இல்லை. இரு பக்கமும் செங்குத்தான பாறைகளின் நடுவே விரையும் Potomac நதியில் சிறு படகு (canoe) விட்டுக்கொண்டு செல்லும் சாதனை விரும்பிகள். பாறைகளில் கயிறு கட்டி -அதைப் பிடித்துத் தொங்கியபடி மேலே ஏறும் rock climbers. உயிரைத் துச்சமாக நினைப்பவர்கள்!



Trailன் ஒரு பகுதியில் கிட்டத்தட்ட செங்குத்தாக ஏறும் ஒர் இடம் வருகிறது. பார்க்கத் திகிலாக இருந்தாலும் ஏறும்போது சுலபமாக இருக்கிறது -கால் ஊன்றி நடப்பதற்கு இடமிருப்பதால். அங்கங்கே பறைகள், இரைச்சலுடன் Potomac நதி, அந்தக்கரையில் அடர்ந்த காடு என்று கண்ணெதிரே 'சட்'டென்று மாறும் காட்சிகள். மற்ற trailகள் போலவே, பஸ், கார், ரயில், செல் ஃபோன், மின்சாரம், டாய்லெட், வென்டிங் மெஷின் என்று நவீன உலகத்தின் அத்தனை அடையாளங்களும் துறந்து, சில மணி நேரங்கள் இயற்கையுடன் கலக்க முடிகிறது. 5 கி.மீ. தூர trail முடித்து, தொடங்கிய இடத்திற்கு வருவதற்கு 2 மணி 30 நிமிடம் ஆகிறது.



தீபிகா, ஷிபு, மதுவுடன் Billy Goat Trail ல் நேற்று (அக்டோபர் 8) hiking சென்றது இத்துடன் நான்காவது முறை. ஜப்பானின் 'தகாமிகுரா' மலையின் மாற்றாக, weekly regular activity ஆக வெர்ஜீனியாவின் Billy Goat Trail ஆகிறதா பார்க்கலாம்.

1 comments:

Anonymous said...

Neenga adangavae maateengala :)

Nice to see that Shibu and Madhu are also showing their interests in hiking.

-Hema

Post a Comment