Dec 13, 2011

"அடேய்...... நீ தானா அது?"

"ந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு இருக்குமோ?" என்பது பெரும்பாலும் நெகடிவ் கருத்தையே குறிப்பதால் அதை விட்டு விடலாம்; வேற சரியான வார்த்தைகள் கிடைக்கவில்லை. இருந்தாலும், வாஷிங்க்டனில் 'எங்கும் தமிழ்; எதிலும தமிழ்' என்கிற மாதிரி தமிழர்கள் எண்ணக்கை அதிகமாக இருப்பதால், .எங்கோ எப்படியோ தெரிந்தவர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு இங்கு அதிகம். அதிலும் நான் ரயிலில் பயணிப்பதால் "நன்னா இருக்கேளா?' என்ற குரல் காதில் விழாத நாள் சொற்பம்.

ப்படித்தான் தமிழ் அன்பர்கள் சிலர Thanksgiving Day என்ற சாக்கில் நவம்பர் கடைசி வாரத்தில் ஏற்பாடு செய்திருந்த ஒரு சின்ன சந்திப்புக்குப் போயிருந்தபோது அறிமுகமான ஒருவர், பேச்சுவாக்கில் 'தூத்துக்குடி' 'சுபாகர்' என்ற வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு, "அடேய்... நீ தானா அது? நானும் உன்கூடப் படிச்சவன் தாண்டா!" என்று சொல்லி, ஒரு 33 வருஷம் rewind பண்ணி கொஞ்ச நேரம் மலரும் நினைவுகளில் ஆழ்ந்தோம். (இந்த மாதிரி திடீர் கண்டுபிடிப்புகள் என்னிடம் தவறாமல் கேட்கும் அடுத்த கேள்வி: "நம்மோட 'வசீகரன்' ன்னு ஒருத்தன் படித்தானே... அவனுடன் இன்னும் உனக்கு டச் இருக்குதா" என்பதே.)

டுத்து அறிமுகமான தமிழ் அன்பர், "நானும் கிண்டிதான்" என்றார். "நான் 84 பேட்ச்" என்றதற்கு "அட! நானும் அதே பேட்ச் தான்!" என்றார். "நான் ECE " என்று அவர் பெயரைச் சொன்ன பின்னும் அவசர அவசரமாக என் ஞாபக செல்களில் அவர் முகத்தைத் தேடி (courtesy : சுஜாதா) தோல்வி அடைந்து நான் தலையைச் சொறிந்ததைக் கண்டு அந்த 'கிண்டி' சற்றும் திகைக்காமல், மனம் தளராமல், ECE யில்  எங்களுக்கு  ரொம்பவும் பரிச்சயமான மூன்று பெண்களின் பெயர்களைச் சொல்லி "அவங்களைத் தெரியும் இல்ல? அந்த கிளாஸ் தான் நானும்..." என்றார், நக்கலாக. அருகிலேயே நின்றிருந்த எங்கள் சக தர்மினிகள் இருவருக்கும் கேள்வி ஞானத்தில் அந்த 'மூவர்' பற்றித் தெரிந்திருக்க, , "சபாஷ்! சரியான க்ளூ!" என்கிற மாதிரி விஷமமாகச் சிரித்தனர். போட்டோவில் என்னுடன் தம்பதி சகிதமாக நிற்கும் அந்த கிண்டி 84 நண்பர் யார் என்று கேட்டதில் Guindy84 group ல் எல்லாருமே 'அது மெய்யப்பன்" என்று கண்டுபிடித்து விட்டார்கள். (நண்பர்கள் சந்திப்புக்குக் கூட gentleman dress ல் வந்திருப்பதால் அவர் dayscholar என்ற க்ளூ தேவை இல்லாதது :) ) மெய்யப்பன் அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற John Hopkins University யின்   (வாஷிங்க்டனுக்கு அருகில் இருக்கிறது) Research Wing ல் சிறந்திருப்பதை கூகுளில் தேடினால் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment