Mar 7, 2009

கண்ணைப்பார்; சிரி!

நல்ல கவிதைகளை ‘சட்’டென்று அடையாளம் தெரிந்து விடுகிறது.
(மோசமான கவிதைகளையும் தான்).

"வெள்ளை நரிகள் ஓடி அலையும்
அடர்ந்த காட்டில் தன்னந்தனியே நான்.
இலைகளில் வழியும் சூரிய ஒளியில்
மேகத்தைத் துரத்தும் என் முயற்சிகள்
வீண் போயிருக்கலாம்.
மரங்கொத்திக்குத் தெரியவா போகிறது,
தனக்கு உணவாவது இயற்கை அழிப்பு என்பது?

ஓடையில் மிளிரும் கதிர்கள் என் காதோரம்.
ஆயினும்-தீராது என் துரத்தல்கள்.
மேகங்கள் ஓடுவதை நிறுத்தும் வரை.

எனக்கும் தெரியும்-

விழுந்தால் மாங்காய்; போனால் கல்.
சூரியன் ஒடுங்கும் அந்திக்குள்
என்னை இன்னொருமுறை நிரூபிக்க வேண்டும்".
--சுதீஷிமா--

"கண்ணைப் பார்; சிரி" என்று ஏனோ எங்க ஊரில் திருஷ்டி கழிவதற்காக எழுதியிருப்பதின் ரசனை கூட இல்லாமல் புதுக்கவிதை என்ற பெயரில் வார்த்தைகளை ‘அப்படி, இப்படி’ போட்டு எதையோ எழுதுபவர்களுக்கும், எழுதியபின் "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ" என்கிற மாதிரி ‘ஆ, ஊ’ என்று புல்லரிக்கும் ஜால்ராக்களுக்கும் மேற்கண்ட என் 'சொந்த' வரிகள் நக்கல் கலந்த சமர்ப்பணம். என் வார்த்தைக் குவியலைப் படித்ததும் உங்கள் காதில் ‘குறு, குறு’ வென்று நமச்சல் ஏற்பட்டால், உங்களை என் வாரிசாக அறிவிக்கிறேன் :-)

0 comments:

Post a Comment