Mar 22, 2009

Who is an Optimist?

டிசம்பரில் குளிர ஆரம்பித்துவிட்டால், ஒற்றை இலக்க டெம்பரேச்சரில் இங்கே வெந்நீரில் மட்டுமே குளிக்க முடியும். டிசம்பர் 15 அல்லது 16 -ல் பாத்ரூமின் ஹாண்ட் ஷவர் knob ஐ ’வெந்நீர்’ பக்கம் திருகி வைத்தேன். இனி கொஞ்ச நாள் எப்போதும் வெந்நீர் தான்.....

மறுநாள் குளிக்க வந்தபோது knob குளிர் நீர் பக்கம் திரும்பியிருந்தது. பழக்க தோஷத்தில் மாற்றிவிட்டேன் என்று மறுபடியும் வெந்நீர் பக்கம் திருப்பி வைத்தேன்.

மறுநாளும் அதே போல் குளிர் நீர் பக்கம் knob திரும்பியிருந்தது. பாத்ரூமின் தரை கூட கொஞ்சம் wet-ஆக இருந்த மாதிரித் தெரிந்தது.

லேசாக ஒரு 'பய அலை' எனக்குள் பரவியது. காரணம்....? சில மாதங்களுக்கு முன் தான் இந்த செய்தியை லோக்கல் நியூஸ்பேப்பரில் படித்திருந்தேன்:
----
JAPAN TIMES -Saturday, May 31, 2008
Homeless woman arrested for living in man's closet undetected for a year

A homeless woman who sneaked into a man's house in Fukuoka prefecture and lived undetected in his closet for a year was arrested after he became suspicious when food mysteriously began disappearing.

Police found the 58-year-old woman, Tatsuko Horikawa, hiding in the top compartment of the 57-year-old man's closet Thursday and arrested her for trespassing, police spokesman Hiroki Itakura from Kasuya Police Station said Friday.

The resident of the one-story house in Shime, Fukuoka Prefecture, installed security camera that transmitted images to his mobile phone after becoming puzzled by food disappearing over the past several months. One of the cameras captured someone inside his home Thursday after he had left, and he called police, fearing a burglary.

"We searched the house . . . checking everywhere someone could possibly hide," police spokesman Itakura said. "When we slid open the shelf closet, there she was, nervously curled up on her side."

The man lived alone in the one-story house and was not using the room with the shelf closet where the women was living. The height of the shelf closet is only 50 cm. She had moved a mattress into the small closet space and even took showers, Itakura said, calling the woman "neat and clean."
(http://search.japantimes.co.jp/cgi-bin/nn20080531f4.html )
----
என் ஜப்பானிய நண்பரிடம் இதைப்பற்றிக் கூறியபோது, knob வெந்நீரில் செட் பண்ணி வைத்தாலும், சில மனி நேரங்களில் தானாகவே குளிர் நீர் நிலைக்கு வந்துவிடும் வகையாக இருக்கும் என்றார். ’அப்பாடா’ என்று கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. தீபிகா ஃபோனில் "எதற்கும் ஒருமுறை நம்ம closet எல்லாம் திறந்து பார்த்துவிடுங்கள்" என்றாள். "சரியான பயந்தாங்கொள்ளி" என்று சிரித்தேன். (நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் என்பது அவளுக்குத் தெரியாது!)

இப்பவும் எனக்கு அவ்வப்போது சந்தேகம் வரும் -அதெப்படி knob தானாகவே திரும்பும் என்று. இருந்தும் டெக்னிக்கல் கேள்விகளைப் பிடிவாதமாகத் தவிர்த்து விடுவேன்! நான் ரொம்ப optimist-ஆக்கும்! :-)

1 comments:

Anonymous said...

உன்னிடம் நல்ல எழுத்து வலம் உள்ளது தம்பி.

Post a Comment