Mar 3, 2009

Management Guru -'செல்ல' இட்லி!

There was this guy in SPIC Tuticorin, popularly known as "Professor", who once saw me replying "I'm sorry, I don't know" to a question (about a pump's capacity) posed by our Manager at the jobsite; he gave a guesstimated figure which turned out to be wrong. Later during coffee time he said: "Subahar, learn this mantra while at work: One should never say these 3 words: "தெரியாது"(I don't know) "இல்லை" (No, it is not) "முடியாது" (Impossible). Just ask yourself..... Have they employed us to come up with this kind of answers? No! Nobody likes negative responses, even though they know well that the response is only negative. Always make your best attempt, and stay positive..... Never feel sorry for not knowing an answer; the Manager has been in this plant for more than 8 years; he himself doesn't know the answer, got it?”
.
Lately I came across another Management Guru who specializes in handling complaints. When a mistake of this person is pointed out, this person employs a 4-pronged strategy:

(1) First, DENY that it is a mistake. The more aggressive your denial is, the easier the opponent goes away convinced, cursing his own ignorance!

(2) (If denial won't work, probably because it is such an obvious mistake), be quick to RECALL A SIMILAR MISTAKE THE OPPONENT DID long ago, and highlight that what you did was nothing serious compared with his!! You've 'enlightened' the opponent, who would go away realizing that it its normal for every human being to make mistakes!

(3) (If you don't recall any of your opponent's past mistakes), be smart to explain that YOU DID THE MISTAKE BECAUSE OF SOMETHING DONE/SAID BY THE OPPONENT! This will make the opponent 'recognize' his role(!) in your mistake, which he has not thought of even in his wild dreams!

(4) (If you can't 'connect' your opponent with your mistake by any means), ADMIT YOUR MISTAKES, and simultaneously JUMP ON THE OPPONENT THAT HE NEVER HAD THE OPEN-MINDEDNESS TO ADMIT his own mistakes, as you do gracefully now! Not only you've made him realize your sudden finding of his being so disgraceful in all these years; he would even be worried of the other 'ghosts in your shelf', that are ready to be unleashed at the drop of a hat!

At the end of a day, either you've made him feel ignorant, enlightened him with life's simple philosophies, showed him there is always the 'other' side to any problem, or made him aware of 'ghosts in your shelf'! Obviously, he would have forgotten about your mistake, in the first place!! Needless to say, I learned the above management strategies from my Management Guru, right inside our home! :-)

மேலே சொன்ன Management strategies பற்றிய ஞானோதயம் ஒரு சனிக்கிழமை காலை தீபிகா இட்லி பரிமாறியபோது வந்தது. ஆசையாக அவள் வைத்த தட்டில் இருந்த இரண்டு இட்லிகளும் கொஞ்சம் கருப்பாக இருந்தன. 'நான் இப்படியொரு இட்லியை இதுவரை பார்த்ததில்லையே' என்று அதிர்ந்து, பிளேட்டில் வைத்த கண்ணை எடுக்க முடியாமல் அதையே உற்றுப் பார்த்து, என் பக்கத்தில் ஒன்றுமே நிகழாதது போல் சாப்பிட்டுக்கொண்டிருந்தவளிடம் கேட்டேன்: ”என்ன, என்ன இது, இட்லி இந்தக் கலரில்...என்ன பண்ணினே?”

என் குரலின் அதிர்ச்சியை மதிக்காமல் சாப்பிட்டுக்கொண்டே ரொம்பக் காஷுவலாக "ஓ, அதுவா? அது வந்து, இந்த உளுந்து முழுசாக வந்ததினால, கலர் கொஞ்சம் மாறிப் போச்சு. இதான் ஹெல்த்தி இட்லிங்கிறாங்க. எதையும் கூட்டிக் குறைச்சுப் போடலை நான்...” என்றாள் (strategy 1). எனக்கு இட்லிக்கு உளுந்து தேவைங்கிறது தெரிந்ததே பெரிய விஷயம்; அதில் முழுசா போடனுமா, பாதியா போடணுமா யாருக்குத் தெரியும்? தவிர, ஹெல்த் சமாச்சாரம் என்றாலே அது பார்க்கிறதுக்கு சகிக்கிற மாதிரி இருக்காது.
.
"ஆனாலும் என் சர்வீஸில இப்படிப் பார்த்ததில்லையே...” என்று இழுத்தேன். "ஏன் பார்த்ததில்ல? அன்னைக்கு பிள்ளைகளுக்கு பிரெட் ரோஸ்ட் பண்றேன்னு ரெண்டு ஸ்லைசை முழுசாக் கருப்பா ஆக்கலை, நீங்க?" (strategy 2) என்றாள். "இல்ல செல்லம்; பிரெட் கருப்பானது டைமர் அதிகமா செட் பண்ணிட்டதால. நீயும் அந்த மாதிரி ஏதாவது ஓவர் குக்கிங் பண்ணிட்டியா ராஜாத்தி?" என்றேன். "இந்தா பாருங்க, இந்த நைஸாப் பேசி 'பாயிண்ட்' பிடிக்கிற வேலை தானே வேண்டாங்கிறது? பிரமரா வீட்டில இந்தியா போனபோது நீங்க தானே அவங்களை உளுந்து வாங்கிட்டு வரச் சொன்னீங்க? (strategy 3) அந்த உளுந்தில செய்தது தான் இது...வேணுமின்னா அவங்க கிட்டேயே கேளுங்க.....என்றாள். "மனுஷனுக்கு நம்பிக்கைன்னு ஒண்ணு வேணும்".

என்னடா இது, 'டாபிக்' தடம் மாறுதே, பந்து என் 'ஸைடு'க்கே திரும்பி வந்துவிட்டதே என்று உணர்ந்து, "அன்னைக்கு பிரமரா வீட்டில் சாப்பிட்ட இட்லி மெல்லிசா, மிருதுவா..... அதெல்லாம் விடு; வெள்ளையா இருந்ததே...” என்று சொல்லிக்கொண்டிருந்த போதே தற்செயலாக பிரமராவிடமிருந்தே அவளுக்கு போன் வந்தது. “உளுந்தை அப்படியே போடக்கூடாது...” என்று ஏதோ செய்முறையில் மாற்றம் சொல்ல, இவள் என்னிடம் "ஆமாம்பா... இப்பத்தான் அவங்க சொல்றது புரியுது; நாளைக்கு உங்களுக்கு பூப்போல இட்லி செய்து தர்றேன்...” என்றவள், "இப்ப பாருங்க, நான்கிறதாலே தப்பை ''தப்பு'ன்னு உடனே (!) ஒத்துக்கறேன். நீங்க எப்பவாவது என்கிட்ட ஒத்துக்கிட்டிருக்கீங்களா?" என்று முடித்தாள் (strategy 4), ஒரு வெற்றிக் களிப்புடன்.

"நான் தப்பு செய்தால் தானே, செல்லம், ஒத்துக்கொள்வதற்கு?" என்று சொல்ல நினைத்து, சொல்லாமல் விட்டேன்!

5 comments:

Anonymous said...

Nice post...
Made me remember Amma (me too) using this strategy often . sometimes when she makes sambar with less salt in it , and when asked about it she cooly replies that less salt is good for health....
Namma familyilae indha strategy ellam sagajam anna......

Deepika's Subahar said...

I pity Sundar, Premi..! :-)

Britto said...

I cant remember any lady who does not use these strategy. Shanthi is an exception.

Deepika's Subahar said...

Britto, don't tell me that you know of 'so many' ladies..! :-)

arvindselvi said...
This comment has been removed by the author.

Post a Comment