Apr 11, 2009

குனியக் குனியக் குட்டு!


ஜப்பானில் மரியாதை நிமித்தம் குனிவது மரபு. ஒரு சின்ன நன்றியும் மன்னிப்பும் கூட குனிதல் இல்லாமல் வருவதில்லை. ஒருவர் குனியும்போது, அதற்கு மரியாதையாக குனிதலைப் பெறுபவரும் குனிகிறார். பெரிய மனிதர்களைப் பார்க்கும்போது, 90 டிகிரி வரை குனிவதும், ‘பெரியவர்’ நிமிர்ந்த பின்னும் ஜூனியர், ஒரு சில நிமிடங்களாவது அதிகம் குனிந்திருக்க வேண்டும் என்பதும் இன்று வரை வழக்கத்தில் உள்ள மரபு. ”நான் உன்னிலும் எந்த வகையிலும் உயர்ந்தவன் இல்லை” என்று ஒருவருக்கொருவர் உணர்த்தி நட்பு பாராட்டுவதாக ஆரம்பித்த வழக்கம்.

மேற்கத்திய நாடுகளில் குனிதல் வேலையை, கை கொடுத்தல் செய்கிறது. “என் கைகளில் எந்த ஒரு ஆயுதமும் இல்லை; நாம் நண்பர்கள்” என்பதைக் குறிக்கும்படி தொடங்கியது. (நம் ஊரின் இரு கை கூப்பி வணங்குதலின் சரித்திரக் காரணங்கள் தெரியவில்லை).

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சவூதி மன்னரை சந்தித்த போது மரியாதை காரணமாகக் குனிந்து வைக்க, அது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. http://www.youtube.com/watch?v=4gJtIss7xso குனிவது sub-servient; அமெரிக்க ஜனாதிபதி யாருக்கும் குறைந்தவர் இல்லை; Protocol violation, இத்யாதி, இத்யாதி. வெள்ளை மாளிகை “ஒபாமா குனியவில்லையே; சவூதி மன்னரின் கையைக் குலுக்குகிறார், அவ்வளவே” என்று மறுத்து, இன்னும் கொஞ்சம் தமாஷ் காட்டியது! ”என்ன இருந்தாலும் ஒபாமா முஸ்லிம் தானே... அதான்” என்கிறது Washington Times: "The bow was an extraordinary protocol violation. Such an act is a traditional obeisance befitting a king's subjects, not his peer. There is no precedent for U.S. presidents bowing to Saudi or any other royals....Mr. Obama's bow to the Custodian of the Two Holy Mosques does not help his image with those who believe he is secretly a Muslim, and why he chose to bow only to the Saudi King and not to any other royals remains unexplained..... Mr. Obama is proving that one can be elected president without knowing how to behave presidentially”.

இந்தக் கூத்தில், எனக்குப் புரியாதது -குனிவது அராபியர்களின் வழக்கமா, என்ன? ஒபாமா ஏன் சவூதி மன்னரிடம் குனிய வேண்டும்? பதிலுக்கு ச. மன்னர் கொஞ்சமும் குனிய முயற்சி செய்ததாகத் தெரியவில்லை!

0 comments:

Post a Comment