அண்மையில் பழைய புத்தகங்களைத் தேடியபோது அவ்வப்போது கண்ணில் படும் 1985-ல் நான் எழுதிய டயரி மீண்டும் ’பட்டது’. அதில் எனக்குப் பிடித்த கவிதையாக அப்துல் ரகுமானின் “அந்தக் கண்கள்...” என்ற கவிதையைக் கத்தரித்து ஒட்டியிருக்கிறேன்.
அந்தக் கண்கள்....
என்னிடம் எதைத் தேடுகின்றன?
இந்தச்
சாம்பல் மேட்டில்
கனலும் இல்லை
பொறியும் இல்லை.
இப்போது
அந்தக் காதலும் இல்லை;
காதலின்
நினவுகளும் இல்லை.
இதயத்தில் பற்றிய நெருப்பில்
எதுவுமே மிஞ்சவில்லை.
நீ
யாருடை சித்திரத்தைக்
கண்களில் வைத்துக்கொண்டிருக்கிறாயோ
அந்தக் காதலன்
நான் அல்ல.
நான்
அவனுடைய மௌனச்சிதை!
இந்த உலகத்தில்
அன்பு குற்றம்.
நம்பிக்கை குற்றம்.
ஏங்குவதோ பாவம்.
இங்கே
காதலுக்கு இடமில்லை.
அப்துல் ரகுமானின் புதுக்கவிதை வரிகளில் பெர்ஸனலாக ஏதோ ஒரு மெஸேஜ் இருப்பதை உணரலாம். பல்வேறு காலகட்டங்களில் இந்த வரிகள் என்னுடன் ’நெருக்கமாவதை’ உணர்ந்திருக்கிறேன். பெரும்பாலும் தனிமை நேரங்களில்.
இருந்தும், 85-ல், கனவுகள் மட்டுமே இருந்த அந்த நாட்களில், இந்தக் கவிதை என்னை ஏன் கவர்ந்தது என்று புரியவில்லை.

.
0 comments:
Post a Comment