Apr 20, 2009

சின்னதாக ஒரு டான்ஸ்

சின்ன குரூப்பாக, ஜப்பான் மாதிரி முற்றிலும் ‘அந்நிய’ நாட்டில் இருப்பதில் இழக்கும் விஷயங்களில் ஒன்று, நமக்கே உரிய இந்திய விழாக்களும் கொண்டாட்டங்களும். (இந்தியர்கள் அதிகம் இல்லாத ஆர்லண்டோவிலேயே வரலட்சுமி விரதத்திலிருந்து புது வருஷப்பிறப்பு வரை -தமிழ், தெலுங்கு ஒவ்வொன்றும் தனித்தனியாக- கோவிலில் உள்ள ஹாலில் கூடி, கலக்கி விடுகிறார்கள்).

இங்கே சுமார் 20 இந்தியக் குடும்பங்கள் மட்டும் உள்ள எங்க ஊரில் New Year போது சின்னதாகக் கூடிவிடுவோம். சென்றமுறை புதிதாய்த் திறந்திருந்த “ஆசியா ரெஸ்ட்ராண்ட்டில்’ Dec-31 இரவு கூடி, சின்னதாக ப்ரொக்ராம் கொடுத்து, புத்தாண்டு பிறந்த நள்ளிரவு கேக் ....

மதுவும், ஸ்ருதியும் (செல்வகுமார்-ரேணுகா பெண்) சின்னதாக ஒரு டான்ஸ் பண்ணினார்கள் (Choreographer -தீபிகா). இணைத்திருக்கும் விடியோவில் பார்க்கலாம்.

0 comments:

Post a Comment