Feb 1, 2009

மாணிக் : சென்னை-25

முதன்முதல் நான் ஹாஸ்டலில் என் அறைக்குள் (3-வது பிளாக், ரூம் -20, கிண்டி, 1979) நுழைந்தபோது என் ரூம்மேட் மாணிக்கராஜ். டான் பாஸ்கோ இங்கிலிஷ். (நான் தூத்துக்குடி தமிழ்). கொஞ்சம் மிரண்டேன். அப்புறம் கிரவுண்ட் ஃப்ளோரில் கொசு கடிக்கும் என்று பலரைப்போல ’சமயோசித’மாக சிந்தித்து மேல்மாடி ரூம் 24-க்கு மாறினேன். மாணிக் BE முடித்து IIM-B போய் entrepreneur லைனில் நுழைந்து NIIT franchise ஆரம்பித்து, விழுந்து, எழுந்து வேகமாக அமெரிக்கா பறந்து இப்போ அங்கே ‘தனி ராஜ்யம்’ நடத்திக்கொண்டிருக்கும் வரை அவ்வளவாகத் தொடர்பில்லாமல் தான் இருந்தேன். (இடையில் 90-ல் சென்னையில் அவன் கல்யாணத்திற்குப் போனது தவிர).

2004-ல் பொன்ராஜும் நானும் குடும்பசகிதம் மாணிக்கின் நியூயார்க் நகர வீட்டில் 2 நாள் தங்கியது ஒரு வசந்த அனுபவம். மாணிக் கடினமான விஷயங்களை எளிதாகவும் கோர்வையாகவும் பேசுவதில் expert. ரெஸ்ட்ராண்டில் strawberry-யும் chocolate fondue யும் (மாணிக் ரெகமென்டேஷன்) எடுத்துக்கொண்டு கொஞ்ச நேரம் ’பழசை’ அலசிய பின் பேச்சு பிள்ளை வளர்ப்பு பற்றித் திரும்பியது. "We can only do very little to our children" என்று அவன் சொன்னது விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அந்த "little" என்ன என்றபோது வியப்பாக இருந்தது. "பசங்க கிட்ட கொஞ்சம் வெளியே நின்னு guide மட்டும் பண்ணு; ’அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க’ ன்னு முதல்ல நீ நம்பு. அப்புறம் அந்த நம்பிக்கையை அவங்க கிட்ட கொண்டு வா. பசங்க கிட்ட இந்த self-confidence-ஐ கொண்டு வர்றதுதான் உன்னோட பெரிய முயற்சியா இருக்கனும். அப்புறம் பசங்க கிட்ட communication channel எப்பவும் திறந்தே இருக்கணும். அதுக்கு, அவங்க லெவெல்ல communicate பண்ண நாம் கத்துக்கணும்..."

பசங்க லெவல் என்றால் என்ன? உதாரணமாக, அவங்க கேட்கிற அமெரிக்க பாப் பாடல்களக் கேட்டு ("எனக்கும் அமெரிக்க உச்சரிப்பில் பாடல் வரிகள் புரியாது; நெட்டில் தேடிப் பிடித்து லிரிக்ஸை தெரிந்து கொள்வேன்"), அதில் நல்ல, பொல்லாத வரிகளை கண்டுகொண்டு பேச்சுவாக்கில் பசங்களுடன் பேசுவது. மாணிககால் முடிந்தது. நான் அம்பேல்!

மாணிக்கின் இரண்டு பையன்களின் பெயர்களும் அவன் தனித்துவத்தைக் காட்டும்: கவின், மிகல். தூய தமிழிலான இந்தப் பெயர்கள் ஆங்கிலத்தில் எழுதும்போது Kavin, Michael என்றாகி அமெரிக்கப் பெயர்களாகின்றன. வைரமுத்து "கன்னத்தில் முத்தமிட்டாலு’க்காக எழுதிய "ஒரு தெய்வம் தந்த பூவே... கண்ணில் தேடல் என்ன தாயே" பாடலை வரிக்கு வரி ஆங்கிலப்படுத்தி தன் அமெரிக்க நண்பர்களுக்கு விளக்கியிருக்கிறான்.

Hiking -ல் மாணிக்கிற்கு ஒரு ‘காதல்’ -என் போலவே. பார்க்கலாம், நாங்கள் கனவு காண்பது போல் Mt.Fuji hiking போகிறோமா என்று.

மாணிக் எங்க college batch-mate -ன் group e-mail-ல் அவ்வப்போது எழுதும் விரிவான கட்டுரைகளை நான் பிள்ளைகளுக்கு படிக்கக் காட்டுவேன். (எங்க group-ல் பலரும் அதுபோல் செய்வது அப்புறம் தான் தெரிந்தது). இன்றைய பொருளாதாரப் பிரச்சனையில் அமெரிக்காவின் பங்கு பெரிதாக இருந்தாலும், அதற்கு தீர்வும் அமெரிக்காவிலிருந்துதான் வரும் என்பதில் நான் மாணிக்குடன் உடன்படுகிறேன்.

சமீபத்தில் Obama inaguration பற்றி மாணிக் எழுதிய கட்டுரை The Hindu -வில் வெளியானது. "An occasion I won't miss for the world" என்ற தலைப்பில் எழுதி "What a country!" என்று முடியும் அந்தக் கட்டுரை அமெரிக்காவைக் குற்றம் சொல்வதே ஒரு ‘மேதாவித்தனம்’ என்று நினைக்கும் பெரும்பாலான இந்தியர்களுக்கு ரசிக்குமா என்பது சந்தேகமே. அமெரிக்கா பற்றிய pre-conceived opinion இல்லாதிருந்தால் 29-Jan-2009 The Hindu online edition-ல் அந்தக் கட்டுரையைப் படிக்கலாம்: http://www.hindu.com/2009/01/29/stories/2009012952630900.htm

0 comments:

Post a Comment