Feb 9, 2009

இரண்டு செய்திகள்



இந்த வாரம் என்னை ஈர்த்த இரண்டு செய்திகளும் தனி மனித உரிமை பற்றியன:

முதலில் ஜப்பானில். ஸாக்கர், பேஸ்பால் என்று எத்தனை விளையாட்டுக்கள் வந்தாலும் இன்னும் சுமோ கொஞ்சம் கூட பாப்புலாரிட்டி குறையாமல் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஜனவரியில் நடந்த Emperor Cup போட்டியில் வெற்றி பெற்ற Asashoryu என்ற வீரரை சுமோ விளையாடு கமிட்டி விளாசித் தள்ளிவிட்டது -ஏன்? கடைசிப் போட்டியில் வெற்றி பெற்ற Asashoryu ஆனந்தக் களிப்பில் இரண்டு கையையும் உயர்த்தி ஆனந்தத்தைக் கொஞ்சம் வெளிக்காட்டி விட்டார். அவ்வளவே. கமிட்டி அவரைக் 'கட்டம்' கட்டித் திட்டி"(He should learn that winning is not everything in Sumo"), பெரிய மனதுடன் "இன்னொரு முறை இப்படி நடந்தால்..." என்று எச்சரித்து விட்டுவிடடது. (சுமோவில் ஜெயித்த பின்னும் எதையோ தொலைத்த மாதிரி முக பாவத்துடன் வீரர்கள் பேசுவதும், போஸ் கொடுப்பதும் தான் இங்கே "மரபு"!) Asashoryu மங்கோலிய நாட்டுக்காரர் ஆகையால் மரபுகளை சில கணங்கள் மறந்துவிட்டார் போலும்! (பின்னர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்).


இரண்டாவது, இந்தியாவில் கர்நாடகாவில் ஒரு இந்துத்வா குரூப், Feb-14ல் Valentine Day கொண்டாடுவதைப் பிரச்சனை ஆக்குகிறது. இளம் பெண்ணையும் ஆணையும் சேர்ந்து அன்று பார்த்தால், அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கோயிலுக்குச் சென்று தாலி கட்ட்ச் செய்வார்களாம்; மறுத்தால் ‘ராக்கி’ கட்டச் சொல்வார்களாம். (அதையும் மறுத்தால் என்ன செய்வார்கள் என்று சொல்லவில்லை). The Hindu நியூஸ்பேப்பரில் இவர்களை Hindu Taliban என்று எழுதியது நூற்றுக்கு நூறு சரியே.

0 comments:

Post a Comment