Feb 24, 2009

வானமும் சிறகுகளும்

சில பாடல்கள், வரிகள் எத்தனை முறை கேட்டாலும் அதன் impact குறைவதில்லை.

”கன்னத்தில் முத்தமிட்டாலி”ல் வரும் “ஒரு தெய்வம் தந்த பூவே... கண்ணில் தேடல் என்ன தாயே” பாடல் அந்த வகை. கேட்கும் போதெல்லாம் கவனம் கலையாமல் ஒரு வரி விடாமல் என்னை கவனிக்க வைக்கும் மென்மையான, ஆழமான பாடல். வைரமுத்து, எழுதி, A.R. ரஹ்மானின் ரம்மியமான இசையில், ஜெயச்சந்திரன் வரிகளின் வலியை உணர்ந்து பாடுவது. கண்ணதாசனுக்கு "தெய்வம் தந்த வீடு...வீதியிருக்கு" போல, வைரமுத்துவுக்கு "ஒரு.... தெய்வம் தந்த பூவே....கண்ணில் தேடலென்ன தாயே”. (திரையில் பாதி மட்டும் வரும் அந்தப் பாடலை இதில் கேட்கலாம்/ பார்க்கலாம்: http://www.youtube.com/watch?v=SR-JtoUBuWA )

பாடலின் கவித்துவம் மிக்க அத்தனை வரிகளிலும், கீழே வரும் வரிகள் என்னை சிறப்பாகக் கவர்கின்றன; கிறங்க வைக்கின்றன.

"எனது வானம் நீ...... இழந்த சிறகும் நீ"
"எனது வானம் நீ...... இழந்த சிறகும் நீ"

ஒருவரே எப்படி வானமும், சிறகுமாக இருக்க முடியும்?
முடியும்; சிறகுகளை இழக்கும்போது அது தெரிகிறது.
சிறகினை இழக்கும்போது, இழப்பு சிறகு மட்டுமல்ல. வானமும் தான்.

இன்று (Feb-24) வாணிஸ்ரீ பிறந்த நாள்.
தோற்றம்: 24-Feb-1970 மறைவு: 3-May-1998.

.

0 comments:

Post a Comment