Feb 19, 2009

டோக்கியோ

நேற்று (Feb-18) டோக்கியோ வரை business trip போகவேண்டி காலை 8 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, இரவு 10 மணிக்குத் திரும்பினேன். புல்லட் டிரெய்ன் 601 கி.மீ. (ஒன்வே) தூரத்தை சரியாக 2 மணி 50 நிமிடத்தில் அடைகிறது.

ரயிலில் காபி விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் "Mt. Fuji எத்தனை மணிவாக்கில் பார்க்கலாம்?" என்றேன் (ரயிலில் இருந்து நல்ல வியூ கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருந்தேன்). அந்தப் பெண் ‘சட்’டென்று ஒரு டயரியை எடுத்து, பக்கங்களைப் புரட்டி, "11 மனி 12 நிமிடத்தில் 'வெதர்' க்ளீயராக இருந்தால், இடது பக்க ஜன்னலோரம் பார்க்கலாம்" என்று சொல்லி, எனக்குப் பதில் சொன்னதாலேயே ஜென்ம சாபல்யம் அடைந்து, முகம் மலர்ந்து சிரித்துச் சென்றாள்.

டோக்கியோவின் யோகோஹாமா ஸ்டேஷன் அருகில் சுமார் ஆயிரம் ரெஸ்டராண்ட்களில் இந்திய உணவகத்தைத் தேடி.... 980 yenனுக்கு பரோட்டாவும் சிக்கன் கறியும் காரமாக இருந்தது. யாருக்கும் புரியாது என்பதாலோ என்னவோ, ரெஸ்டராண்ட்டின் பெயர் ‘நிர்வாணா’ என்றிருந்தது. உள்ளே ஜப்பானியப் பெண் சர்வர்கள், சூரிதாரில். எனக்குள் 'ஹைக்கூ' தோன்றியது:

இந்திய ரெஸ்டராண்ட்
சூரிதாரில் ஜப்பனியப் பெண் சர்வர்கள்.
காரமில்லாத சிக்கன் கறி.
என்னருகே கிமோனோவில் தீபிகா.

டோக்கியோவின் ’அவசரகதி’யையும் மீறி, சில விஷயங்கள் கண்ணில் படும். சென்ற முறை போயிருந்தபோது, ஒரு தெரு முழுவதுமே "No-smoking" என்று பண்ணியிருந்தார்கள். மக்களும் பொறுப்பாக, தெருவில் புகை பிடிப்பத்ற்கென்று ஒதுக்கியிருந்த இடத்தில் (மட்டும்) நின்று மிகச் சிரத்தையாக சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார்கள். Disciplined society!

ஸ்டேஷனிலிருந்து 3 நிமிடம் நடந்து 'மேப்'பின் உதவியுடன் நான் போகவேண்டிய ஆபீஸ் இருந்த பில்டிங் வந்துவிட்டேன். ஆனால், பில்டிங்கின் பெயர் (Kamiya Building) கண்ணிலேயே படவில்லை. 20-22 மாடிக் கட்டடமாகையால் ஏராளமான கம்பெனிகள். முதல் மாடியில் இருந்த இன்னொரு கம்பெனிக்குள் நுழைந்து "காமியா பில்டிங் இது தானே?" என்று கேட்டதும் அந்தப் பெண் தலையை அங்கேயும் இங்கேயும் சாய்த்து யோசித்து, அடுத்தவரைக் கேட்க, அவர் உள்ளே ஓடி, ஒரு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து, "யெஸ். இது தான் ..." என்றார். ஜப்பானியர்களுக்கு பொதுவாக, கடிவாளம் மாட்டிய குதிரை போல் வேலையைத் தவிர வேற எதுவும் தெரியாது என்று அறிவேன். இவ்வளவு தூரம் என்று நினக்கவில்லை..!

டூர் போய் திரும்பும்போது எப்பவும் அந்த ஊர் ஸ்பெஷல் - ஸ்நாக்ஸ்- பிள்ளைகளுக்கு வாங்கி வருவதில் எனக்கு ஒரு ‘கிக்’. இந்த முறை இல்லை.....

0 comments:

Post a Comment