Feb 17, 2009

"நான் கடவுள்" - தொடரும் அலசல்......(Naan kadavuL)

பகலவன் எழுதியது-
<< சென்ற வாரம் "நான் கடவுள்" பார்த்து விட்டு வந்து இரண்டு மூன்று நாட்கள் அந்த பாதிப்பு, << அதிர்வு, நினைப்பு அடங்காமல் இருந்ததால்.....

இங்கும் அப்படியே, பகல்ஸ்.....

"நான் கடவுளி"ன் தனித்தன்மை அதன் முடிவில் இருக்கிறது. பிச்சைக்காரர்களின் அவலம் நாம் பார்க்காதது அல்ல. ஒரு குருட்டுப் பிச்சைக்காரியும் காசியிலிருந்து ஊர் திரும்பிய - அவ்வளவாக சிலாகித்துக் கொள்ள முடியாத- ஒரு இளைஞனும் சந்திக்கும்போது வழக்கமாக நாம் எதிர்பார்க்கும் அனுதாபம், காதல், சண்டை, சுபம் அல்லது தற்கொலை ஏதும் இல்லாமல், கதை பிச்சைக்காரியின் அவலங்களத் தொடர்கிறது. சமுதாயம் அவளை மீட்கவில்லை. மதங்களும் வெறும் போதனையுடன் நின்று விடுகின்றன.

இங்கே தன்னைக் கடவுளாக உணரும் இளைஞன் (இந்து மதத்தின் உச்சக்கட்டமே ஒவ்வொருவனும் தன்க்குள் இருக்கும் கடவுளை அறிந்து கொள்வது தானே) அவளை மீட்பது அவள் மரணம் மட்டும் தான் என்று தெரிந்து, "ஆக்கலும் நானே, அழித்தலும் நானே" என்பதில் கடவுளின் ரோலாகிய அழித்தலைச் செய்கிறான். (அந்த இளைஞன் கொடியவனாகக் காட்டப்படவில்லை என்பதைக் கவனிக்கவும்).

சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் சிறப்பாகப் படைத்து நிஜத்துக்கு மிக அருகில் நம்மை இழுத்துச் சென்று பாலா தரும் அந்தக் கொடூரமான முடிவில் ஆன்மீகத்தைக் கலந்திருப்பது அதிர்ச்சி மற்றும் அபாரம். அவள் கிறிஸ்துவ போதனைகளால் கவரப்பட்டு தேவனிடம் ஒதுங்குவது அவள் desparation-ஐக் காட்டுகிறது.

மனித அவலங்களுக்கு ஆன்மீகத்திலும் தீர்வு இல்லை; ஆன்மீகம் சொல்லும் வழி "செத்து மடி என்பதே" என்ற அபாரமான சிந்தனையும், அதைச் சொல்லும் துணிவும் இதுவரை எந்த இயக்குனருக்கும் இருந்ததில்லை. காந்தியும் ஆதரித்த கருணைக் கொலை வரிசையில் வருகிற இந்த "ஆன்மீக வதை", நாம் பார்த்திராதது. அதனாலேயே படம் பார்த்து சில நாட்கள் ஆன பின்னும் நெருடுகிறது..

0 comments:

Post a Comment